AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டிலுக்கு அடியில் இதையெல்லாம் வச்சா ஆபத்துதான்… உடனே மாத்துங்க!

Bedroom Storage: வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பலர் கட்டிலுக்கு அடியில் பொருட்களைச் சேமித்து வைக்கின்றனர், ஆனால் போதிய காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாத அப்பகுதியில் தினசரி காலணிகள், முக்கியமான ஆவணங்கள், அட்டைப் பெட்டிகள், உணவுப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், தோல் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை ஒருபோதும் வைக்கக் கூடாது.

கட்டிலுக்கு அடியில் இதையெல்லாம் வச்சா ஆபத்துதான்… உடனே மாத்துங்க!
கட்டில் சேமிப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 27 Jul 2026 14:18 PM IST

வீட்டில் இடம் பற்றாக்குறையாக இருக்கும்போது, கட்டிலுக்கு அடியில் உள்ள காலியான இடத்தை பலரும் பொருட்கள் சேமிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதிய காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாத அப்பகுதியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைப்பது, பூச்சித் தொல்லை மற்றும் ஆரோக்கியக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என வீட்டுப் பராமரிப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தினசரி காலணிகளால் பரவும் கிருமிகள்

வெளியே அணிந்து செல்லும் காலணிகளில் எண்ணற்ற பாக்டீரியாக்களும் தூசிகளும் படிந்திருக்கும். அவற்றை அப்படியே கட்டிலுக்கு அடியில் வைக்கும்போது, அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, நாம் உறங்கும் இடத்திற்கு அருகிலேயே கிருமிகள் எளிதில் பரவக்கூடும். எனவே, காலணிகளை வாசலுக்கு வெளியே அல்லது ஷூ ரேக்கில் வைப்பதே பாதுகாப்பானது.

முக்கிய ஆவணங்களுக்கு நேரும் ஆபத்து

பாஸ்போர்ட், சொத்துப் பத்திரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களை கட்டிலுக்கு அடியில் சேமிக்கக் கூடாது. காற்றிலுள்ள ஈரப்பதம் காரணமாக காகிதங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், எதிர்பாராத விதமாக தண்ணீர் சிந்தினாலும் இவை முற்றிலுமாக பாழாகிவிடும் அபாயம் உள்ளது.

அட்டைப் பெட்டிகளும் பூச்சித் தொல்லையும்

அட்டைப் பெட்டிகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வேகமாக உறிஞ்சும் இயல்புடையவை. காலப்போக்கில் இவை நமத்துப் போய், கரையான்கள் மற்றும் பூஞ்சைகள் பெருகுவதற்கு உகந்த இடமாக மாறிவிடுகின்றன. அட்டைப் பெட்டிகளுக்குப் பதிலாகப் பாதுகாப்பு மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பெட்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

உணவுப் பொருட்களும் பூச்சிகளின் வருகையும்

திண்பண்டங்கள் மற்றும் உலர்ந்த உணவுப் பொட்டலங்களை கட்டிலுக்கு அடியில் வைப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். உணவின் வாசனை எறும்புகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகளை அதிகளவில் ஈர்க்கும். தூங்கும் இடத்தில் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிப்பது ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகளுக்குக் காரணமாகிவிடும்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் ஆயுள் குறைவு

பழைய மடிக்கணினிகள், கேமராக்கள் மற்றும் சார்ஜர்கள் போன்ற மின்னணு சாதனங்களுக்குத் தூசியும் ஈரப்பதமும்தான் முதன்மையான எதிரிகள். கட்டிலுக்கு அடியில் இவற்றை வைக்கும்போது, மின்சுற்றுகள் பழுதாகி பேட்டரிகள் வீங்குவதற்கும் துருப்பிடிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

Also Read: துணி காயலையா? ஈஷியா துணிகளை உலர்த்தும் மேஜிக் வழிகள்!

தோல் பொருட்கள் மற்றும் புத்தகங்களின் சேதம்

தோல் பைகள், ஜாக்கெட்டுகள் போன்ற லெதர் பொருட்களுக்கு எப்போதும் போதிய காற்றோட்டம் அவசியம். காற்றோட்டம் இல்லாத சூழலில் லெதர் பொருட்களின் மீது வெள்ளை நிறப் பூஞ்சை படர்ந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும். அதேபோல், புத்தகங்களும் ஈரப்பதத்தால் மஞ்சள் நிறமாக மாறி பூஞ்சை பிடித்துக் கிழிந்துவிடும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us