கண் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
Detect Eye Cancer Early: கண் புற்றுநோய் அரிதானது என்றாலும், ஆரம்பகால கண்டறிதல் மிக முக்கியம். பார்வை மங்கல், கண் வலி, கருவிழி நிற மாற்றம், கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்றவை அறிகுறிகளாகும். சூரிய ஒளி அதிகம் படும் நபர்கள், வெள்ளை சருமம் உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர்.

கண் புற்றுநோய் (Eye Cancer) என்பது கண்களில் ஏற்படும் அர்ப்பட்ட நோயாகும். இது பெரியவர்களில் இன்ட்ராகுலர் மெலனோமா மற்றும் குழந்தைகளில் ரெடினோபிளாஸ்டோமா (Retinoblastoma) என்ற வகைகளாக காணப்படுகிறது. இதன் அறிகுறிகளில் பார்வைக் குறைபாடு, கண்புரை, வலி மற்றும் கண்ணில் வெள்ளை ஒளி போன்றவை அடங்கும். சிகிச்சை முறைகளில் கதிர்வீச்சு, வேதியியல் சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் லேசர் சிகிச்சை உண்டு. ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் முக்கியம், குறிப்பாக குழந்தைகளில் கண் ஒளிப்பாதிப்பு ஏற்பட்டால் உடனே பரிசோதிக்க வேண்டும். கண் புற்றுநோய் என்பது அரிதானது என்றாலும், அதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சைக்கு மிகவும் முக்கியமானது. கண்களில் ஏற்படும் சில மாற்றங்கள் அல்லது அசாதாரண உணர்வுகள் கண் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
பார்வையில் ஏற்படும் மாற்றங்கள்
பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் கண் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். திடீரென பார்வை மங்குவது அல்லது தெளிவின்மை ஏற்படுவது, ஒரு பொருளை இரண்டு இரண்டாகப் பார்ப்பது அல்லது பார்வை சிதறுவது, பார்வையின் ஒரு பகுதியில் நிலையான கருப்புப் புள்ளிகள் அல்லது நகரும் நிழல்கள் தெரிவது ஆகியவை அடங்கும். படிப்படியாக அல்லது திடீரென பார்வையை இழப்பது மற்றும் அவ்வப்போது ஒளிர்வு அல்லது மின்னல் போன்ற தோற்றங்கள் தெரிவதும் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும்.
கண்ணில் ஏற்படும் மாற்றங்கள்
கண்ணில் ஏற்படும் சில மாற்றங்களும் கண் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். கருவிழியின் நிறத்தில் மாற்றம் அல்லது கருவிழியில் புள்ளிகள் தோன்றுவது, கண் தொடர்ந்து சிவப்பாகவோ அல்லது வீங்கியோ காணப்படுவது, கண்ணில் தொடர்ந்து வலி, எரிச்சல் அல்லது அசௌகரியம் இருப்பது ஆகியவை இதில் அடங்கும்.
ஒரு கண் மற்ற கண்ணை விட சற்று வெளியே துருத்தி இருப்பது போல் தோன்றுவது அல்லது ஒரு கண்ணின் இமை மற்றதை விடத் தாழ்வாக அல்லது தொங்கிய நிலையில் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும்.
பிற அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள்
காரணமின்றி கண்ணில் இருந்து தொடர்ந்து நீர் வடிதல் மற்றும் பிரகாசமான ஒளியைப் பார்க்கும்போது அதிகப்படியான கூச்சம் அல்லது அசௌகரியம் ஏற்படுவதும் கண் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். வெள்ளை நிற சருமம் உள்ளவர்கள், நீண்ட காலமாக சூரிய ஒளிக்கு அதிகம் exposure ஆனவர்கள், சில மரபணு குறைபாடுகள் உள்ளவர்கள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் கண் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.
மேற்கூறிய அறிகுறிகள் அல்லது ஆபத்து காரணிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் கண் புற்றுநோயை குணப்படுத்த முடியும். உங்கள் கண்களில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகவும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil News பொறுப்பேற்காது.)