AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: ஆஸ்துமா பிரச்சனையால் அவதியா..? இந்த 5 பொருட்களை தவிர்ப்பது நல்லது!

Asthma Trigger Foods: ஆஸ்துமா நோயாளிகள் சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அறிகுறிகளை மேம்படுத்தலாம். துரித உணவு, முட்டை, சல்பைட்டுகள், வாயுவை உண்டாக்கும் உணவுகள் மற்றும் பால் பொருட்கள் ஆஸ்துமாவை அதிகரிக்கும். இந்த உணவுகள் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த உணவுகளை அளவாகவோ அல்லது முழுமையாகவோ தவிர்க்க வேண்டும். சரியான சிகிச்சையுடன், சீரான உணவு முறை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவும்.

Health Tips: ஆஸ்துமா பிரச்சனையால் அவதியா..? இந்த 5 பொருட்களை தவிர்ப்பது நல்லது!
ஆஸ்துமா பிரச்சனைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 17:28 PM IST

ஆஸ்துமா (Asthma) ஒரு கடுமையான சுவாச பிரச்சனை நோயாகும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை கொடுக்கும். ஆஸ்துமா என்பது பாதிக்கப்பட்ட நபரின் சுவாச குழாய்களை வீச செய்து, சுவாசப் பாதையில் சுருக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கோ இந்த நோய் பாதிப்பு இருந்தால், சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆஸ்துமா நோயாளிகள் (Asthma Patients) எந்தெந்த உணவுகளை (Foods) எடுத்துக்கொள்ள கூடாது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

துரிய உணவுகள்:

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சாலையோர கடைகளில் கிடைக்கும் துரித உணவுகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆஸ்துமா நோயாளிகள் துரித உணவை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த உணவு பொருட்களில் செயற்கை வண்ணங்கள், சரியாக வேகவைத்த பொருட்கள் போன்ற பொருட்களை சேர்க்கப்படும். இது சுவாச பிரச்சனையை உண்டாக்கும்.

முட்டை:

ஆஸ்துமா நோயாளிகள் அதிக அளவு முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு முட்டை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இது ஆஸ்துமா பிரச்சனையை தூண்டும். உணவு ஒவ்வாமை கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் மார்பு இறுக்கம் உள்ளிட்ட ஆஸ்துமா தாக்குதலை கொடுக்கும்.

சல்பைட்டுகள்:

சில ஆஸ்துமா நோயாளிகள் சல்பைட்டுகள் உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. சல்பைட்டுகள் என்பது உணவுகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயனம் ஆகும். இவை பீர், ஓயின், ஊறுகாய், உலர் பழங்கள் மற்றும் சில பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பயன்படுத்தப்படும். இவை சுவாசப் பிரச்சனைகள் மற்றும் இருமலை ஏற்படுத்தும்.

வாயு உண்டாக்கும் உணவுகள்:

ஆஸ்துமா நோயாளிகள் வாயு உண்டாக்கும் உணவுகளை தவிர்க்கலாம். அதன்படி பீன்ஸ், முட்டைக்கோஸ், பயறு வகைகள் மற்றும் வெங்காயம் போன்ற வாயுவை உண்டாக்கும் உணவுகள் வாயுவை ஏற்படுத்தும். வயிற்றில் வாயு உண்டாக்கி அழுத்தத்தை ஏற்படுத்தி, சுவாசத்தை அசௌகரியமாக்கும். இது ஆஸ்துமா பிரச்சனையை அதிகரிக்கும். இந்த உணவுப்பொருட்களை குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது.

பால் பொருட்கள்:

ஆஸ்துமா நோயாளிகளுக்கு தயிர், சீஸ் மற்றும் பால் போன்ற பால் பொருட்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பால் பொருட்கள் சளியை உற்பத்தி செய்யும். இது சுவாசிப்பதில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9 Tamil பொறுப்பேற்காது.)

Follow Us