3 நாட்களுக்கு அலர்ட்.. கேப் விடாமல் கொட்ட போகுது கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செப்டம்பர் 17 : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே நேரத்தில், பகல் நேரங்களில் வெயில் அடித்து வருகிறது. இப்படியாக வானிலை இருக்கும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்ளுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 17,18,19ஆம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், 2025 செப்டம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 செப்டம்பர் 17ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.




Also Read : 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..
கேப் விடாமல் கொட்ட போகுது கனமழை
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREAhttps://t.co/LOvDNF1Sqf pic.twitter.com/paJFj09bds
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 17, 2025
2025 செப்டம்பர் 18ஆம் தேதியான நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 செப்டம்பர் 19ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்
சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 17,18ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.