செப். 16 முதல் ரெடியா இருங்க.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 16, 2025 அன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில்கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், செப்டம்பர் 14, 2025: செப்டம்பர் 13, 2025 அன்று வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, செப்டம்பர் 14, 2025 இன்று வடக்கு தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய விதர்பா பகுதியில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய விதர்பா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 16 ஆம் தேதி முதல் கொட்டப்போகும் கனமழை:
அதேபோல், செப்டம்பர் 16, 2025 அன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 17, 2025 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் – பெரம்பலூர் மக்களுக்கு விஜய் உறுதி..
செப்டம்பர் 18, 2025 அன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 19, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றொடு பக்கம்:
அடுத்து வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை இருக்கும் என்றாலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அழைக்கும் பாஜக மேலிடம்? டெல்லி செல்லும் இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.