Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அலர்ட் மக்களே… வரப்போகும் அடுத்தடுத்து 2 புயல்கள்.. வெதர்மேன் சொன்ன தகவல்!

NorthEast Monsoon : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2025 நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கக் கூடும் எனவும், நவம்பர், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகக் கூடும் டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார். இந்த புயல்களால் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக இருக்கும் எனவும் கணித்துள்ளார்.

அலர்ட் மக்களே… வரப்போகும் அடுத்தடுத்து 2 புயல்கள்.. வெதர்மேன் சொன்ன தகவல்!
வடகிழக்கு பருவமழை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Sep 2025 15:39 PM IST

சென்னை, செப்டம்பர் 14 :  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) இயல்பைவிட அதிகம் பெய்யும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு புயல்கள் உருவாகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டு பருவமழை தான் இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழை. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் பொழிகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை அதிகமாக காணப்படும். ஆனால் தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்திற்கு பிறகு தொடங்கும்.

இந்தப் பருவமழை காலத்தில் தான் தமிழ்நாட்டில் ஆண்டு மழைப் பகுதியில் அதிக மழை அளவு கிடைக்கிறது.  எனவே இன்னும் சில வாரம் இல் வடகிழக்கு பருவ மழை தொடங்க கூடும். எனவே வடகிழக்கு பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் டிசம்பர் மாதங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

Also Read : செப். 16 முதல் ரெடியா இருங்க.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

வரப்போகும் அடுத்தடுத்து 2 புயல்கள்


அதேபோல ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை பெய்யக்கூடிய குளிர்கால பருவ மழையும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமனை குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைக் கொண்ட விட 20 சதவீத முதல் 35 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் புத்தகத்தை இரண்டு புயல்கள் உருவாகலாம்.

புயல் சின்னங்கள் டெல்டா வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால் வட மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைப்பொழிவு இருக்கும்‌. ஜனவரி பிப்ரவரியில் இயல்புக்கு அதிக மழை பதிவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. என்ன தெரிவித்திருக்கிறார்.

Also Read: சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை.. இன்னும் தொடருமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது இன்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் குடும்பமும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.