AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீவிரமடையும் பருவமழை.. 8 மாவட்டங்களில் இன்று பொளக்கப்போகும் கனமழை.. வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Today : தமிழகத்தில் அடுத்த் நான்கு தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று திருவண்ணாமலை, கள்ளிக்குறிச்சி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தீவிரமடையும் பருவமழை.. 8 மாவட்டங்களில் இன்று பொளக்கப்போகும் கனமழை.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் மழைImage Source: x
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Sep 2025 06:30 AM IST

சென்னை, செப்டம்பர் 07 :  தமிழகத்தில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று கனமழை (Tamil Nadu Weather) பெய்ய  வாய்ப்புள்ளது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,  அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்  கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கூட அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், கடந்த 5 நாட்களாகவே மழை பொழவு எதுவும் இல்லை.  கடந்த வாரத்தில் தான், சென்னையில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்தது. அதன்பிறகு பெரிய அளவில் மழை  இல்லை. புறநகரில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 7ஆம் தேதி முதுல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடரும் கனமழை


2025 செப்டம்பர் 8ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 செப்டம்பர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 10ஆம் தேதி சேலம், நாமக்கல், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்யை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 7ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us