சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை.. இன்னும் தொடருமா? வானிலை மையம் அலர்ட்
Chennai Weather Today : சென்னையில் நள்ளிரவில் கனமழை பெய்தது. எழும்பூர், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், இரு தினங்களுக்கும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை, செப்டம்பர் 01 : சென்னையில் நள்ளிரவில் கனமழை (Chennai Weather) வெளுத்து வாங்கியுள்ளது. சென்ட்ரல், நுங்கம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, ஆவடி, போரூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போது, மேகமூட்டமாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்காசி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று கூட, கனமழை வெளுத்து வாங்கியது. பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டும், இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.




இந்த நிலையில், 2025 செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று 12 மணியில் இருந்து கனமழை பெய்து வந்தது. வடபழனி, கோயம்பேடு, ஆவடி, போரூர், அண்ணா நகர், விருகம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கும் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதே போல, புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read : இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. மதுரையில் பதிவான 40 டிகிரி செல்சியஸ்..
சென்னையில் மழை தொடருமா?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/CGyJubKA0U
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 31, 2025
ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 1ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read : தமிழகத்தில் 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 1, 2025 ஆம் தேதி முதல் இந்தியாவில் வழக்கத்தை விட அதிகப்படியான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 109% அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.