சென்னையில் பதிவான 27 செ.மீ மழை.. வரலாறு காணாத ஆகஸ்ட் மாத மழை – பிரதீப் ஜான்..
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம் – ஆகஸ்ட் 31, 2025: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 31, 2025) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை (செப்டம்பர் 1, 2025) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தரைக்காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2025, செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெற்றோர்களே உஷார்.. குளிர்பானம் குடித்த சிறுவன்.. வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு!
சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மேக வெடிப்பின் காரணமாக நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதில், மணலியில் அதிகபட்சமாக 27 செ.மீ. மழை, விம்கோ நகரில் 23 செ.மீ. மழை, மணலி புது நகரில் 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது அதி கனமழையாக கருதப்படுவதுடன், திடீர் மழையால் அந்தப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.. யார் இவர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வரலாற்றில் இல்லாத அளவு மழை – பிரதீப் ஜான்:
Historic August for Chennai with 3 – 100 mm Rainfall events in a Month
==================
August 2025 has turned out to be a historic month for Chennai. For the first time ever, the city has recorded three 100+ mm events in a single month (on August 22, 23 and 31). Such a… pic.twitter.com/gZkzKyxb8C— Tamil Nadu Weatherman (@praddy06) August 31, 2025
இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் மூன்று முறை 100 மில்லிமீட்டர் மழையைத் தாண்டி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2025 ஆகஸ்ட் மாதம் 22, 23 மற்றும் 31 ஆம் தேதிகளில் 100 மில்லிமீட்டர் மழையைத் தாண்டி பதிவாகியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் சுமார் 140 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும், ஆனால், இந்த ஆண்டு நுங்கம்பாக்கத்தில் இதுவரை 200 மில்லிமீட்டர் கடந்து மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.