Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.. யார் இவர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tamil Nadu DGP G. Venkatraman : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக பணியாற்றி வரும் இவருக்கும், கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், வெங்கட்ராமன் பொறுப்பேற்க உள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.. யார் இவர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 Aug 2025 14:09 PM

சென்னை, ஆகஸ்ட் 31 : தமிழகத்தின்  சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை (Tamil Nadu DGP Venkatraman) நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  டிஜிபி சங்கர் ஜிவாலை (Shankar Jiwal) ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக  வெங்கடராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று பிற்பகல் தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக  வெங்கடராமன் பதவியேற்க உள்ளார்.  தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக சங்கர் ஜிவால இருந்தார். சங்கர் ஜிவால் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்ததுபணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூன்று பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பாக பொறுப்பு டிஜிபியாக தற்போது நிர்வாகி பிரிவில் உள்ள வெங்கடராமனை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையிலேயே தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி இன்று மதியம் சங்கர் ஜிவால் முறைப்படி பணி ஓய்வு பெற்று அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளது. 

Also Read : ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு.. அடுத்த டிஜிபி யார்?

முன்னதாக, சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகத்தின் தலைவராக இருந்த ஷைலேஷ் குமார் ஓய்வு பெற்ற நிலையில், அந்த பொறுப்புக்கு வினித் தேவ் வான்கடே நியமிக்கப்பட்டார். இப்படியான சூழலில், அதிகாரப்பூர்வ அறிவிப்பாக, தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read : அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு

யார் இந்த வெங்கட்ராமன்?

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஜி.வெங்கட்ராமன். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், பி.ஏ, எம்.ஏ படிப்புகளை முடித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, 1994ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்ற இவர், தமிழ காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.

ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றி முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டவர். 2024ஆம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற இவருக்கு, நிர்வாகப் பிரிவு ஒதுக்கப்பட்டது. தற்போது, அவர் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.