AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Weather : தமிழகத்தில் 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Chennai Weather Today : தமிழக்ததில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather : தமிழகத்தில் 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Aug 2025 07:37 AM IST

சென்னை, ஆகஸ்ட் 30 : தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Update) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் ஒருசில இடங்களில் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று மிதமான மழை (Chennai Weather) பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிய நிலையில், இந்த வாரம் மழை பொழிவு பெரிதாக இல்லை. அவ்வப்போது, மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

பகல் நேரங்களில் வெயிலின் தாக்க இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பலத்த தரைகாற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை

சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை அப்டேட்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி) 15, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 12, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 10, மேல் கூடலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 7, கூடலூர் பஜார் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us