AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வங்கக் கடலில் காற்றழுத்தம்.. கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழையே பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது-

வங்கக் கடலில் காற்றழுத்தம்.. கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Sep 2025 14:57 PM IST

சென்னை, செப்டம்பர் 12 : தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்கள் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.  மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

நேற்று (11-09-2025) தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (12-09-2025) காலை 08.30 மணி அளவில் வடக்கு ஆந்திர – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

Also Read : பிச்சு உதறபோகும் கனமழை.. 2 நாட்களுக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும். என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்


இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 12ஆம் தேதியான இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை.. பிற மாவட்டங்களில் எப்படி?

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை 2025 செப்டம்பர் 12,13ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow Us