குஷியில் தென் மாவட்ட பயணிகள்.. தசரா, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விவரம் இதோ!
Dasara Diwali Special Trains : தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைசூர் - நெல்லை, மைசூர் - காரைக்குடி, மைசூர் - ராமநாதபுரம் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 14 : தீபாவளி, தசரா (Diwali Dasara Special Trains) பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை – மைசூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. இதனால், தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. விரைவு ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களுக்கு, வெளி மாநிலங்களுக்கும் செல்வதற்கு பிரதான போக்குவரத்தாக விரைவு ரயில்கள் உள்ளன. இதில் பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையையும், அக்டோபர் 2ஆம் தேதி தசராவும் கொண்டாடப்படுகிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். இதனையொட்டி, தற்போது மைசூர் – நெல்லை, மைசூர் – காரைக்குடி, மைசூர் – ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் எண் 06239 மைசூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 2025 செப்டம்பர் 15 முதல் நவம்பர் 24 வரை திங்கள்கிழமைகளில் காலை 8.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.




Also Read : மதுபோதையில் மூன்றாவது மாடியில் தூங்கிய இளைஞர்.. நிலை தடுமாறி கீழே விழுந்து பலியான சோகம்!
தசரா, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்
South Western Railway has notified Weekly/ Bi- Weekly Express Special trains to clear extra rush of passengers during Dasara, Diwali,& Chhath Festival
Advance Reservation for the above Special Trains are open from #SouthernRailway End pic.twitter.com/AOQ1sez31g
— Southern Railway (@GMSRailway) September 13, 2025
மறுமார்க்கத்தில் ரயில் எண். 06240 திருநெல்வேலி – மைசூரு வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 16 முதல் நவம்பர் 25 வரை செவ்வாய்க்கிழமைகளில்
பிற்பகல் 3.40 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு மைசூர் சென்றடைகிறது. இந்த ரயில் மைசூர், மண்டயா, ராமநாகரம், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, நெல்லை சென்றடைகிறது.
ரயில் எண். 06243 மைசூர் – காரைக்குடி இருவார சிறப்பு ரயில் செப்டம்பர் 18 முதல் நவம்பர் 29 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.00 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் காரைக்குடி – மைசூரு வார இருமுறை சிறப்பு ரயில் (06244) செப்டம்பர் 19 முதல் நவம்பர் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காரைக்குடியில் இருந்து மறுநாள் காலை 07.45 மணிக்கு மைசூர் அடையும்.
Also Read : காருக்குள் காதலியுடன் திருமணம்.. சரமாரியாக தாக்கிய பெண்ணின் உறவினர்கள்!
இந்த ரயில் மைசூர், மந்தூர், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 06237 மைசூர் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 27 வரை திங்கட்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06238 ராமநாதபுரம் – மைசூரு வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 28 வரை செவ்வாய்க்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 07.45 மணிக்கு மைசூருவை அடையும். இந்த ரயில் மைசூர், கேன்கீரி, பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.