Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? விரைவு ரயில்களில் வந்த மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Egmore Railway Station : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதனால், சில முக்கிய ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது சென்னை கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? விரைவு ரயில்களில் வந்த மாற்றம்..  தெற்கு ரயில்வே அறிவிப்பு
எழும்பூர் ரயில் நிலையம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Sep 2025 07:01 AM IST

சென்னை, செப்டம்பர் 12 :  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் (Egmore Railway Station) மேம்பாட்டு பணிகள் காரணமாக, பல விரைவுகளின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, சில விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திற்கு இருந்து இயக்கப்படும் தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்திருந்தது. இதன்படி, சில விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில், தற்போது, அனந்தபுரி விரைவு ரயிலும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயணிகளின் முக்கிய போக்குவரத்து வசதியாக விரைவு ரயில்கள் இருந்து வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இதற்காக பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

வழக்கமாக எழும்பூரில் இருந்து தான் விரைவு ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. ஆனால், அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ரூ.735 கோடி மதிப்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதனால், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, சில விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அனந்தபுரி விரைவு ரயிலும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read : மதுபோதையில் காரை ஓட்டியதால் விபரீதம்.. கடலுக்குள் சிக்கிய கும்பல்.. நடந்தது என்ன?

அனந்தபுரி விரைவு ரயில் சேவையில் மாற்றம்

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில், சென்னை எழும்பூருக்கு செல்லாமல், தாம்பரம் ரயில் நிலையத்திலேயே நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை கொல்லத்திற்கு எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மக்களே நோட் பண்ணுங்க.. சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்!

வண்டி எண் 20636/20635 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயிலில் பயணிக்கும் பயணிகள் இனி தாம்பரத்திற்கு இருந்த தன் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தஞ்சாவூர் சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில், சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் ஆகியவையும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், எழும்பூர் – திருச்சி ராக்போர்ட், எழும்பூர் – மதுரை பாண்டியன், எழும்பூர் – திருச்சி சோழன் விரைவு ரயில்கள் ஆகியவை வழக்கம் போல் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.