மக்களே நோட் பண்ணுங்க.. சென்னை மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்!
Chennai Metro Train Service: சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளால், செப்டம்பர் 15 முதல் 19, 2025 வரை பச்சை வழித்தடத்தில் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. கோயம்பேடு-அசோக் நகர் இடையே காலை 5-6 மணிக்கு 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 11: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நடக்கும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் வரும் செப்டம்பர் 15, 2025 முதல் செப்டம்பர் 19, 2025 வரை ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பச்சை வழித்தடத்தில் ஒரு பகுதியாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேலே பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரைஇயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நேரம் இதன் ஒரு பகுதியாக, வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மேலே நடைபெற்று வரும் இரண்டாம் கட்டகட்டுமானப் பணிகளின் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
மாற்றப்படும் நேரம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் வரும் செப்டம்பர் 15, 2025 முதல் செப்டம்பர் 19, 2025 வரை மெட்ரோ இரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம்
சென்னையில் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதன் ஒரு…
— Chennai Metro Rail (@cmrlofficial) September 11, 2025




அதன்படி நீல வழித்தடமான விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் ஏஜி டி.எம்.எஸ் வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.மாறாக பச்சை வழித்தடத்தில் மேற்கண்ட நாட்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை மாற்றம் இருக்கும். அதாவது, பரங்கி மலை மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் மட்டுமே இயக்கப்படும்.
இதையும் படிங்க: 2 நாள் விடுமுறை… போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விமான நிலையம் மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கோயம்பேடு முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரைபின்வரும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி செப்டம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இதையும் படிங்க: எழும்பூர் இல்ல.. இனி தாம்பரத்தில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கம்.. அலர்ட் பயணிகளே!
இந்த நேரத்தில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ நிலையம் இடையே, ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதேசமயம் காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் மற்றும் வழக்கமான மெட்ரோ இரயில் அட்டவணை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.