Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மக்களே அலர்ட்.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!

Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி (நாளை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சென்னை மக்களே அலர்ட்.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!
சென்னை மெட்ரோ ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Aug 2025 12:53 PM

சென்னை, ஆகஸ்ட் 26 : சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் (Chennai Metro Rail) 2025 ஆகஸ்ட்27ஆம் தேதி (நாளை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) கொண்டாட்டத்தை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப தங்களது பயண திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கேற்பு சலுகைகள், தள்ளுபடிகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து வருகிறது.

தற்போது வரை, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில், பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனால், மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றப்படும். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

Also Read : 32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

இந்த கொண்டாட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மெட்ரோ ரயில் சேவையில் மாற்ம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான (நாளை) மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம், “2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.  மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.

Also Read : விநாயகர் சதுர்த்தி விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?

காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கமான நேரங்களில், ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும்என குறிப்பிட்டார்.