Ganesh Chaturthi Wishes: போனை எடுங்க.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தட்டி விடுங்க!
Vinayagar Chaturthi: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபடுவதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும், உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பக்கூடிய வாழ்த்துச் செய்திகள் பற்றிக் காணலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் இதனை அனுப்பி மகிழுங்கள்.

விநாயகர் சதுர்த்தி
இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அறியப்படும் விநாயகப்பெருமான் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இப்படியான விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் வருவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இப்பண்டிகை ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்நாளில் நாம் விநாயகரை வழிபட்டு எந்தவொரு செயலையும் தொடங்குவோம். அதேசமயம் பொதுவாக பண்டிகை நாட்கள் என்றால் நாம் நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவோம். அப்படியாக விநாயகர் சதுர்த்தி நாளில் நாம் என்னென்ன வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்பது பற்றிக் காணலாம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்திகள்
- “உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகர் அருளால் உங்கள் வாழ்க்கையில் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்’.
- “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். எம்பெருமான் விநாயகர் தெய்வீக பார்வை உங்கள் வாழ்க்கையை நேர்மறை மற்றும் வெற்றியால் நிரப்பட்டும்”.
- “விநாயகர் சதுர்த்தி நாளானது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அன்பு, சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்”.
- “ஆனை முகத்தானின் ஞானமும் வழிகாட்டுதலும் தடைகளைத் தாண்டி உங்கள் கனவுகளை அடைய உங்களை ஊக்குவிக்கட்டும். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!”.
- “பிள்ளையார் சதுர்த்தி நாளில் நம்மைச் சுற்றி நிகழும் தெய்வீக சக்தி உங்கள் வாழ்க்கையை நேர்மறை, தைரியம் மற்றும் உறுதியால் நிரப்பட்டும். உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!”.
- “மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். உங்கள் இலக்குகளை விரைவில் அடைவதற்காக பலன்கள் கிடைக்கட்டும்”.
- “எப்போதும் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கும் நண்பனுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! – விநாயகர் ஆசிகள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் மாற்றட்டும்”.
- “உங்கள் முயற்சிகளுக்கு விநாயகர் அருள் வெற்றியையும் செழிப்பையும் தரட்டும். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!”
- “இந்த விநாயகர் சதுர்த்தி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வின் தொடக்கத்தில் வலிமையையும், ஒவ்வொரு அடியிலும் ஞானத்தையும் காணட்டும்”.
- “இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!. உங்கள் வளமான வாழ்க்கைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சிகளையும் நீங்கள் காண வேண்டும், உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்”.
- “விநாயகர் உங்கள் வாழ்க்கையில் தடைகளை நீக்கி அவரின் தும்பிக்கையின் பலத்தை நம்பிக்கையாக இந்நாளில் உங்களுக்கு அளிக்கட்டும். இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்து வாழ்த்துக்கள்”
- “அன்பும் பக்தியும் நிறைந்த மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். உங்கள் வீடு மகிழ்ச்சியாலும் செழிப்பாலும் நிறைந்திருக்கட்டும்”.