தினமும் மது குடித்ததால் திட்டிய தந்தை.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!
Youth killed himself in Kanchipuram | காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 25 : காஞ்சிபுரத்தில் (Kanchipuram) தினமும் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வருவதை தந்தை கண்டித்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் மகனை கண்டித்த தந்தை
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். 24 வயதாகும் இவர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ராஜசேகர் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். அதுமட்டுமன்றி, பணிக்கு செல்லாதபோது அவர் அதிக அளவு மது குடித்து வந்துள்ளார். இதனால் ராஜசேகர் மற்றும் அவரது தந்தைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Tirunelveli: மதிக்காத மனைவி,மகன்.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!
தந்தை மகனுக்கு இடையே தகராறு – இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு
இந்த நிலையில், ஆகஸ்ட் 22, 2025 அன்றும் ராஜசேகர் மீண்டும் குடித்துவிட்டு வந்த நிலையில், தந்தை மகனுக்கு இடையே தராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த ராஜசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜசேகரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்து.. 2.30 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்!
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது குடித்துவிட்டு வந்தததை தந்தை கண்டித்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.