காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்து.. 2.30 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்!
Wind Turbine Accident in Madurai | திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த லாரி மதுரை அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை, ஆகஸ்ட் 25 : திண்டுக்கல்லில் (Dindigul) இருந்து மதுரைக்கு ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, மதுரை அருகே விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரியில் ராட்சத இறக்கை இருந்த நிலையில், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், போக்குவரத்தை சரிசெய்ய சில மணி நேரம் ஆனதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
காற்றாலை இறக்கை ஏற்றிக்கொண்டு வந்த லாரி
நேற்று (ஆகஸ்ட் 25, 2025) திண்டுக்கல்லில் இருந்து லாரி ஒன்று ராட்சத காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தது. அப்போது காற்றாலை இறக்கையை ஏற்றிச்சென்ற லாரி, வாடிப்பட்டி அருகே சென்றுக்கொண்டு இருந்த லாரி தனிச்சியம் மேம்பாலம் முடியும் இடத்தில் காலை 8 மணி அளவில் வந்தபோது அதில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாரி சாலையின் தடுப்பின் மீது ஏறி நின்றது. இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்னாச்சு? திருவள்ளூரில் பரபரப்பு




அணிவகுந்து நின்ற வாகனங்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்
காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விரைவாக செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
இதையும் படிங்க : மயிலாடுதுறையில் அதிர்ச்சி… ஒரே நாளில் 20 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்.. தீவிர சிகிச்சை!
கிரேன் மூலம் மீட்கப்பட்ட ராட்சத காற்றாலை இறக்கை
ராட்சத காற்றாலை இறக்கை சாலையிம் பெரும் பகுதியை அடைத்துவிட்ட நிலையில், வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக சென்றன. பின்னர் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டது. அதன் பிறகு கிரேன் உதவியுடன் சாலையின் தடுப்பு மீது மோதி நின்ற லாரி மற்றும் அது ஏற்றி வந்த காற்றாலை இறக்கை ஆகியவை மீட்கப்பட்டன. இதன் பிறகு லாரி புறப்பட்டு சென்றது. போராடி போலீசார் போக்குவரத்தை சரிசெய்த நிலையில், அங்கு சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.