AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மொத்தமாக மாறும் வடபழனி.. வணிக வளாகத்துடன் பேருந்து முனையம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் மெகா பிளான்

Chennai Vadapalani Bus Depot : சென்னை வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தளங்கள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் பேருந்து முனையம், அலுவலகங்கள், ஓய்வறை, உணவகங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

மொத்தமாக மாறும் வடபழனி.. வணிக வளாகத்துடன் பேருந்து முனையம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் மெகா பிளான்
மாதிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jun 2025 09:53 AM IST

சென்னை, ஜூன் 11 : சென்னை வடபழனி மற்றும் மந்தைவெளியில் வணிக வளாகத்துடன் பேருந்து முனையம் (Chennai Vadapalani Bus Depot) அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  (Chennai metro rail limited) திட்டமிட்டு வருகிறது. சென்னை மொத்தம் 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி வேலைவாய்ப்பு என பலரும் சொந்த ஊர்களுக்கு சென்னையில் தங்கி உள்ளனர். எனவே, சென்னையில் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை தமிழக அரசு நவீன முறையில் மாற்றி அமைத்து வருகிறது.  அந்த வகையில், தற்போது இரண்டு பேருந்து நிலையங்களை நவீன மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம்  ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வணிக வளாகத்துடன் பேருந்து முனையம்

சென்னையின் முக்கிய பேருந்து முனையங்களில் ஒன்றாக இருப்பது வடபழனி.  இங்கு வணிக வளாகத்துடன்  பேருந்து முனையத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாக்ம திட்டமிட்டு வருகிறது. ரூ. 481.93 கோடியில் மதிப்பில் 1.06 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் வணிக வளாத்துடன் பேருந்து முனையம் கட்டப்பட உள்ளது.

10 தளங்களை கொண்ட வணிக வளாகத்தில் 1,475 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 214 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். முதல் தளத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் நிறுவன அலுவலங்கள், ஓய்வறைகள், உணவகங்கள் போன்ற அமைக்கப்பட உள்ளன.

கடைசி இரண்டு தளங்கள் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் போன்றவை அமைக்கப்பட உள்ளன. வடபழனியை போன்று, மந்தவெளி பேருந்து முனையமும் மாற்றப்பட உள்ளன. அதாவது, வணிக வளாகத்துடன் மந்தவெளி பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளன.

மெகா பிளான்


மந்தவெளி மெட்ரோ ரயில் நிலையத்தின் தரை தளத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு கட்டிடம் வணிக வளாகமும், மற்றொரு கட்டிடம் அலுவலக கட்டிடமும், பேருந்து முனையமும் அமைக்கப்பட உள்ளன.

இரண்டு திட்டங்களுக்கும் டெண்டர்களை வெளியிட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் மூன்று முதல் நான்கு மாதங்களில் வழங்கப்படலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், வடபழனியில் அமைய உள்ள வணிக வளாகம் கட்டி முடிக்க கிட்டதட்ட 3 ஆண்டுகளும், மந்தவெளியில் இரண்டு ஆண்டுகளும் ஆகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow Us