AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை மக்களே மிஸ் பண்ணாதீங்க.. பிரம்மாண்ட புத்தக பூங்கா.. எங்கு தெரியுமா?

Chennai Central Metro Book Park : சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட புத்தக பூங்காவை முதல்வர் ஸ்டாலின்திறந்து வைத்தார். ரூ.1.82 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பூத்தக பூங்காவில் 8,000 புத்தகங்கள் உள்ளன. இந்த புத்தக பூங்கா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்கும்.

சென்னை மக்களே மிஸ் பண்ணாதீங்க.. பிரம்மாண்ட புத்தக பூங்கா.. எங்கு தெரியுமா?
புத்தக பூங்காImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Jun 2025 15:08 PM IST

சென்னை,  ஜூன் 10 : சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் அமைக்கப்பட்ட புத்தக பூங்காவை (central metro book park) முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று திறந்து வைத்தார். 5,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 70 புத்தக அலமாரிகள் உள்ளன. சென்னையின் மத்தியில் உள்ளது சென்ட்ரல் ரயில் நிலையம். இந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் அருகே நீதிமன்றம், மெட்ரோ ரயில்  நிலையம், பாரீஸ் உள்ளிட்டவை இருப்பதால் சென்ட்ரல் எப்போது பரபரப்பாகவே இருக்கும். மேலும், குறிப்பாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையமும் இருப்பதால் கூட்டம் எப்போதுமே அலைமோதும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ சேவை பயன்படுத்தி வருகின்றனர்.

சென்ட்ரலில் புத்தக பூங்கா

இப்படியான சூழலில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில், புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா 1.82 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

5,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புத்தகப் பூங்காவில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த புத்தகங்கள் உள்ளன. 40 அரங்குகள், ஒரு சிற்றுண்டிச்சாலை, ஒரு வாசிப்பு இடம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்த ஒரு மினி ஹால் ஆகியவை இங்கு உள்ளன.

இந்த புத்தக பூங்காவில் 8,000 முதல் 10,000 வரை புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு நிகழ்வுகளில் கூடுதல் தள்ளுபடி உண்டு. இந்த புத்தக பூங்கா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்


இந்த  பிரம்மாண்ட புத்தக பூங்காவை முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று திறந்து வைத்தார். திறந்து நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த புத்தக பூங்கா அனைத்து புத்தக வாசிப்பாளர்களுக்கும் பெரிதும் உதவும்.

முன்னதாக, ரூ.29.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலக கட்டடங்கள், பரமக்குடி முழு நேர கிளை நூலக கட்டடம், 70 சிறப்பு நூலகங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, நூல்கள் விற்பனைக்கான மின்வணிக இணையதளத்தையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us