முருங்கை இலை சூப் மூலம் கணவர் கொலை… மனைவி, காதலன் கைது!
திருச்சி மாவட்டம், முசிறியில் விஜயா என்ற மனைவி, தனது கணவர் குமாரை முருங்கை இலை சூப்பில் விஷம் கலந்து கொலை செய்துள்ளார். ரூ.15 லட்சம் கடன் பிரச்னை மற்றும் பாலுவுடனான உறவு குறித்து குமாரின் கண்டனத்தால் ஆத்திரமடைந்த விஜயா, பாலுவின் உதவியுடன் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருச்சி, செப்டம்பர் 20: திருச்சியில் முருங்கை இலை சூப்பில் விஷம் வைத்து கணவரை மனைவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் சிறுசோழன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குமார் என்பவர் தனது மனைவி விஜயா மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். குமார் விவசாய பணி செய்து வருவதுடன் மட்டுமல்லாமல் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும் பார்த்து வந்துள்ளார். இப்படியான நிலையில் குமாருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியது. இதன் பெயரில் பாலு அடிக்கடி குமாரின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது குமாரின் மனைவி விஜயாவுடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
திடீரென உயிரிழந்த குமார்
இதற்கிடையில் பாலு, விஜயா இடையேயான உறவு குமாருக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) குமார் திடீரென இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு விஜயா தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அங்கு வந்த அவரது குடும்பத்தினர் குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து முசிறி காவல் ஆய்வாளர் செல்லதுரை, உதவி காவல் ஆய்வாளர்கள் லோகநாதன் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 71 வயதில் 2வது திருமணம் செய்ய இந்தியா வந்த பெண் கொலை.. 75 வயது நபர் தீட்டிய சதி திட்டம்!




தொடர்ந்து குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் விஜயா, பாலு ஆகியோர் ஈடுபட்டதும் போலீசார் கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
முருங்கை இலை சூப் மூலம் கொலை
அதாவது குமாருக்கு ரூ.15 லட்சம் கடன் ஏற்பட்ட நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதே சமயம் விஜயா, பாலு இடையேயான உறவு தெரிந்ததும் மனைவியின் நடத்தை கொடுத்து கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயா குமாரை கொலை செய்துவிட்டு பாலுடன் நிம்மதியாக இருக்கலாம் என முடிவு செய்துள்ளார். இதற்காக அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் தினமும் இரண்டு தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இப்படியான நிலையில் குமாருக்கு வயிற்று வலி ஏற்படும் போதெல்லாம் முருங்கை இலை சூப் குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விஜயா மற்றும் பாலு முடிவு செய்தனர். அதன்படி குமார் செப்டம்பர் 18ஆம் தேதி வயிற்று வலியால் துடிக்க அவருக்கு இது 20 தூக்க மாத்திரைகளை முருங்கை இலை சூப்பில் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த குமார் மயக்கம் அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய கணவன்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!
சிறிது நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார் என விஜயா சோதனை செய்தபோது மூச்சு இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த பாலுவை அழைத்து குமார் இன்னும் இறக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாலு குமாரின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். தொடர்ந்து இருவரும் எதுவும் தெரியாது போல் அருகில் இருந்த தோட்டத்தில் பூப்பறிக்க சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த விஜயா, குமார் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அலறி துடித்துள்ளார். மேலும் வயிறு வலிப்பதாக கூறிய தன்னுடைய கணவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். உறவினர்களும் குமாரின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலையை தொடங்கிய நிலையில் அதில் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்திருக்கிறார் இதில் தான் குமார் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.