71 வயதில் 2வது திருமணம் செய்ய இந்தியா வந்த பெண் கொலை.. 75 வயது நபர் தீட்டிய சதி திட்டம்!
NRI Woman Murdered in Punjab | அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய பெண் ஒருவர் தனது 71வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், இந்தியா வந்த அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப், செப்டம்பர் 18 : பஞ்சாப்பில் (Punjab) இரண்டாவது திருமணம் செய்துக்கொள்வதற்காக இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு சென்ற தனது சகோதரியை தொடர்புக்கொள்ள முடியாமல் போன நிலையில் அவரது மூத்த சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், திருமணத்திற்கு வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் இந்தியாவில் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருமண செயலி மூலம் இரண்டாவது காதலை பெற்ற பெண்
அமெரிக்காவை சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் என்ற பெண். 71 வயதான இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில் திருமண செயலியை பதிவிறக்கம் செய்த அவர் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் என்ற 75 வயது நபரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் நட்பாக பழக தொடங்கிய நிலையில், அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா தொற்று.. இதுவரை 19 பேர் பலி.. தடுப்பது எப்படி?




சொந்த ஊரில் திருமணத்தை நடத்த முடிவு செய்த காதலர்கள்
திருமணம் குறித்து பேச்சு எழுந்த நிலையில், தனது சொந்த ஊரான இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடத்தலாம் என்று கிரேவால் கூறியுள்ளார். அதனை நம்பி ருபிந்தர் ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அவர் மாயமடைந்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என்பதால் அமெரிக்க தூதரக்கத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு.. இரு ரவுடிகள் என்கவுண்டர்.. பரபரப்பில் உத்தரப்பிரதேசம்!
விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ருபிந்தரை காதலிப்பது போல் நடித்து கிரேவால் பணம் பறித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரிடம் இருந்து மேலும் பணத்தை பறிப்பதற்காக இந்தியாவுக்கு வரவழைத்துள்ளார். இந்தியா வந்த அவரிடம் பணத்தை பறித்த கிரேவால் ருபிந்தரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சிக்ஜீத் சிங் என்பவரிடம் ரூ.50 லட்சம் பண தருவதாக கூறி ருபிந்தரை கொலை செய்து எறித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ருபிந்தரின் எலும்புகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கிரேவாலை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.