இது என்ன புதுசா இருக்கு? மனிதர்களை கடிக்கும் தெரு நாய்க்கு ஆயுள் தண்டனை.. வினோத உத்தரவு
Uttar Pradesh Stray Dogs : உத்தர பிரதேசத்தில் ஆக்ரோஷமான தெரு நாய்களை கட்டுப்படுத்த அம்மாநில அரசு வினோத உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, எந்தவித தூண்டுதலும் இன்றி, மனிதர்களை இரண்டு முறை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், செப்டம்பர் 17 : நாடு முழுவதும் தெரு நாய்கள் பிரச்னை அதிகமாக இருக்கும் நிலையில், உத்தர பிரதேச அரசு வினோத உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, இரண்டு முறை மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய்கள் பிரச்னை அதிகமாக இருந்து வருகிறது. தெரு நாய்களால் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். தெரு நாய்கள் பிரச்னை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதற்கிடையில், தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை, ரேபிஸ் தடுப்பூசிகளை மாநில அரசுகள் செய்து வருகின்றன.
இப்படியான சூழலில் தான், உத்தர பிரதேச அரசு வினோத உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, மனிதர்களை இருமுறை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் மனிதர்களை காரணமின்றி கடிக்கும் தெருநாய்களுக்கு தண்டனை விதிக்கப்படும். முதல்முறை மனிதர்களை கடிக்கும் தெருநாய்களுக்கு 10 நாட்கள் விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம். 10 நாட்களுக்கு பிறகு, தெருக்களில் விடப்படும் நாய்கள் மீண்டும் நாய்களை கடித்தால், வாழ்நாள் முழுக்க அந்த நாய் விலங்கு மையத்தில் அடைக்கப்படும்.
Also Read : வங்கியில் 59 கிலோ தங்கம்.. ரூ. 8 கோடி திருட்டு.. ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை.. அதிர்ந்த கர்நாடகா!




மனிதர்களை கடிக்கும் தெரு நாய்க்கு ஆயுள் தண்டனை
இது கிட்டதட்ட அவர்களுக்கு ஆயுள் தண்டனை தான். இந்த நாய் காப்பகத்தில் இருந்து வெளிவருவதற்கு, அந்த நாயை ஒருவர் தத்தெடுத்தால் மட்டுமே வெளிவரமுடியும். இதுகுறித்து பிரயாக்ராஜ் நகராட்சியின் கால்நடை மற்றும் விலங்கு நல அதிகாரி விஜய் அமிர்தராஜ், “மனிதர்களை கடிக்கும் நாய்களை 10 நாட்கள் காப்பகத்தில் கண்காணிப்பில் வைப்போம்.
அதன் நடத்தை கவனிக்கப்படும். விடுவிக்கப்படுவதற்கு முன், நாய் மைக்ரோசிப் பொருத்தப்படும். இதன் மூலம், நாயின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். அதே நோய் மீண்டும் மனிதர்களை கடித்தால் வாழ்நாள் முழுவதும் காப்பகத்தில் வைக்கப்படும். எதற்காக நாய் கடித்தது என்பது குறித்து மூன்று பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
Also Read : ஓரினச்சேர்க்கை செயலி.. பிளஸ் 1 மாணவனுக்கு 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்த 14 பேர்.. பகீர் சம்பவம்!
காப்பகத்தில் இருக்கும் நாயை தத்தெடுப்பவர் பெயர், முகவரி போன்ற அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். மேலும் நாய் தெருக்களில் விடப்படாது என்று பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். நாயின் மைக்ரோசிப் விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், அந்த நாயை தெருக்களில் விட்டால் தத்தெடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.