Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kanchipuram: திருமணம் செய்வதாக மோசடி.. குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!

Kanchipuram Crime News: காஞ்சிபுரம் பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றிய இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். சரத்குமார் என்கிற இளைஞர், பணியிடத்தில் அறிமுகமான தன்னை காதலித்து, ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில், பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

Kanchipuram: திருமணம் செய்வதாக மோசடி.. குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
திருமண மோசடி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Sep 2025 06:41 AM IST

காஞ்சிபுரம், செப்டம்பர் 18: தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி இளைஞர் ஒருவர் ஆசைகாட்டி மோசடி செய்ததாக காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணவனை பிரிந்து ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வரும் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மதுராந்தகத் தோட்டத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் கார்த்திக் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  தற்போது கார்த்திக்கும், அந்த பெண்ணும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அலுவலகத்தில் உதித்த காதல்

இப்படியான நிலையில்  கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த இளம் பெண் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த வையாவூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதை அந்த பெண் சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார்.  ஆனால் அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னை நேசிக்கிறேன்..  திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Also Read: நீ எனக்கு வேணும்.. கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய பேராசிரியர்!

இதனை தொடர்ந்து இருவரும் போன், மெசேஜ் மூலமாக பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சரத்குமார் மீது அந்தப் பெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவதும் ஒரு கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் அந்த பெண் கர்ப்பம் அடைந்ததாகவும், ஆனால் அதனை கலைக்குமாறு சரத்குமார் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Also Read: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு.. டீ குடிக்க இறங்கியபோது சம்பவம்!

திடீர் திருமணம் செய்த சரத்குமார்

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) இரவு வரை  அந்த பெண்ணுடன் சரத்குமார் பேசிக் கொண்டிருந்துள்ளார்.  ஆனால் திங்கட்கிழமை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து சரத்குமாரிடம் நியாயம் கேட்க  சென்றார். ஆனால் அவரை அவரது குடும்பத்தினர் ஆபாசமாக திட்டி அங்கிருந்து   அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  மேலும் சரத்குமாரை நம்பி ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், 3 சவரன் நகைகளை அளித்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.