Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சினிமாவை மிஞ்சிய காட்சி.. சீருடையிலேயே காஞ்சிபுரம் டிஸ்பி கைது.. திடீரென தப்பியோட்டம்!

Kachipuram DSP Shankar Ganesh : காஞ்சிபுரம் டிஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் நீதிபதி செம்மல் போட்ட உத்தரவின்படி, டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிதடி சம்பவம் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

சினிமாவை மிஞ்சிய காட்சி.. சீருடையிலேயே காஞ்சிபுரம் டிஸ்பி கைது..  திடீரென தப்பியோட்டம்!
காஞ்சிபுரம் டிஸ்பி சங்கர் கணேஷ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Sep 2025 20:44 PM IST

காஞ்சிபுரம், செப்டம்பர் 08 : காஞ்சிபுரம் டிஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் நீதிபதி செம்மல் போட்ட உத்தரவின்படி, டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிபதி செம்மல் வாகனத்தில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது, காவல்துறையினர் உதவியுடன் காவல் வாகனத்தில் ஏறிய டிஎஸ்பி கணேன், அதனை ஓட்டி சென்றுள்ளார். இதனால், சிறை வளாகம் மற்றும் காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 நிமிடங்களுக்கு  பிறகு காவலர்  வாகனத்திலேயே அவர்  மீண்டும் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர்  தப்பியோடவில்லை எனவும், கழிவறைக்கு சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வழக்கின் பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முருகன் என்பவர் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் கோரப்பட்டது. குறிப்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பழங்குடி, பட்டியிலினத்தை சேர்ந்வதர்கள் என்பதால், எஸ்டி, எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

Also Read : இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சி.. நீண்ட கால விசா பெற முடியாது… வெளியான தகவல்

புகார் அளித்து ஒரு மாதம் காலம் ஆகியம் காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த புகார் குறித்து விசாரிக்க டிஎஸ்பி சங்கர் கணேஷ் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், முருகன் தரப்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, புகார் மீது நடவடிக்க எடுக்கப்படாதது குறித்து கவலை தெரிவித்தும், புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, டிஎஸ்பி சங்கர் கணேஷ்க்கு இருப்பதாகவும் நீதிபதி செம்மல் கூறினார்.

Also Read : கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்… சுற்றுலா பயணிகள் அச்சம்!

திடீரென தப்பியோட்டம்

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டியதால், டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக கைது செய்து, 2025 செப்டம்பர் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால், டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை சீருடையில் அவர் கைதானார். காவலர்கள் டிஎஸ்பியை கைது செய்தபோது, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

மேலும், அங்கிருந்த வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இருப்பினும, காவல்துறையினர் நீதிபதி செம்மல் வாகனத்தில் காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு அழைத்து சென்றனர்.  அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் காவல் வாகனத்தில் ஓட்டிச் சென்றிருக்கிறார். பின்னர், 20 நிமிடங்களில் அவர் திரும்பிய நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.