Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சி.. நீண்ட கால விசா பெற முடியாது… வெளியான தகவல்

Sri Lankan Tamil Refugees : இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசா பெற விண்ணப்பிக்க முடியாது என உள்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அண்மையில், இலங்கை தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சி.. நீண்ட கால விசா பெற முடியாது… வெளியான தகவல்
இலங்கை தமிழர்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Sep 2025 16:43 PM IST

சென்னை, செப்டம்பர் 08 : இலங்கை தமிழர்கள் (Sri Lankan Tamil Refugees) நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், இலங்கை தமிழர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மறுவாழ்வு முகாம்களில் 50 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கையில் 1980ல் நடந்த உள்நாட்டு போரால் இலங்கை தமிழர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்தனர்.

இதனால், அவர்கள் அகதிகளாகவே முகாம்களில் தங்க வேண்டி இருந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருத்தப்பட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025-ன்படி, 2015 ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு, இந்தியாவிற்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக் கொள்ளலாம் எனவும், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அவர்கள் இந்தியாவிலேயே தங்கிக் கொள்ளவும்  மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

Also Read : கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்… சுற்றுலா பயணிகள் அச்சம்!

இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசா பெற முடியாது

இந்த நிலையில், மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் 1995 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட கால விசாக்கள் எனப்படுபவை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். அவற்றை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

நீண்ட கால விசாவைப் பயன்படுத்தி இந்தியாவில் ஒருவர் 11 ஆண்டுகள் தொடர்ந்து தங்கியிருந்தால், அதைக் காட்டி அவர்கள் இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும். ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்ட கால விசாக்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மூத்த அதிகாரி கூறுகையில், “இலங்கை தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் இல்லை என கூறினாலும், அது உடனடியாக இந்திய குடியுரிமை வழங்க உதவாது.

Also Read : நிலத்தகராறு.. பெண்ணின் சேலையை உருவி கடுமையாக தாக்கிய குடும்பத்தினர்!

இலங்கைத் தமிழர்கள் நீண்ட கால விசாகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும், ஆனால் வெளிநாட்டினர் குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்” என்றார். இதனால், இலங்கை தமிழர்கள் குடியுரிமை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் தேவை எனவும் இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.