நாகை – இலங்கை கப்பல் சேவை.. மாணவர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. மிஸ் பண்ணாதீங்க!
Nagapattinam - Sri Lanka Ferry Service : நாகை இலங்கை கப்பல் சேவை நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு சுற்றுலா தொகுப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரூ.9,999க்கு இலங்கை செல்லலாம். இதற்கான பயண செலவு, தங்குமிடம், உணவு போன்ற அனைத்தையும் சேர்ந்து சிறப்பு சலுகையாக ரூ.9,999 கப்பல் நிறுவனம் அறிவித்தள்ளது.

நாகை, ஆகஸ்ட் 17 : நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சூப்பரான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாணவர்களுக்கு சிறப்பு சுற்றுலா தொகுப்பு கப்பல் சேவையை இயக்கும் சுபம் ஷிப்பிங் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் நாகர்கோயில் இடையே சுற்றுலாவை மேம்படுத்த, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை – நாகை இடையே கப்பல் சேவை தொடங்கப்பட்டது. செரியாபாணி என்ற பெயரில் இந்த கப்பல் சேவையில் பயணிகள் வராத காரணத்தால், கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு சுபம் நிறுவனத்தின் சார்பில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் புறப்பட்டு 4 மணி நேரத்தில் இலங்கை சென்றடைகிறது.
நாகை – இலங்கை கப்பல் சேவை
ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை இந்த சேவை இயக்கப்பட்டது. அதன்பிறகு, பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து, இந்த சேவை நீடிக்கப்பட்டது. அதாவது, சனிக்கிழமையை தவிர்த்து, வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு இலங்கை – நாகை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டு, 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்து, இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறது. இந்த நிலையில், கப்பல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 3 நாட்கள் சுற்றி பார்க்கும் வகையில், சுற்றுலா சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : கோயில்களில் இனி இந்த பொருட்களுக்கு தடை.. பக்தர்களே நோட் பண்ணுங்க.. அறநிலையத்துறை அறிவிப்பு!
மாணவர்களுக்கு சூப்பர் ஆஃபர்
இதற்காக ரூ.9,999 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5,000 தள்ளுபடியை கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், 12 முதல் 35 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை அடைந்தபிறகு, பேருந்து மூலம் இலங்கையில் முக்கிய இடங்களை சுற்றி பார்க்க உள்ளனர். இதற்காக ஏசி பேருந்து சேவை, தங்குமிடம், உணவு, தமிழ் பேசும் வழிகாட்டிகள் ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
Also Read : ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை.. ரயிலில் இருந்து இறக்கிவிட்ட நபர்.. சென்னையில் அதிர்ச்சி!
இந்த சிறப்பு சுற்றுலா தொகுப்பு திட்டம் மூலம் மூலம் 25 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பயணம் மேற்கொள்ளலாம். இதற்கான முன்பதிவை மாணவர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். வழக்கமான பயணிகளை போல் இல்லாமல், மாணவர்கள் 7 கிலோ வரை லக்கேஜ்களை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் சின்னமான யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண துறைமுகம், யாழ்ப்பாண சந்தை, மன்னார் தீவு மற்றும் தலைமன்னார் உள்ளிட்ட கல்வி மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.