Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்… சுற்றுலா பயணிகள் அச்சம்!

Kanyakumari Glass Bridge : கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்… சுற்றுலா பயணிகள் அச்சம்!
கன்னியாகுமரி கண்ணாடி பாலம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Sep 2025 16:08 PM IST

கன்னியாகுமரி, செப்டம்பர் 08 : கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலையை இணைக்கும கண்ணாடி பாலத்தில் (Kanyakumari Glass Bridge) திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே கண்ணாடி பாலம் மீது நடந்து செல்கின்றன. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட நிலையில், கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்று கன்னியாகுமரி. கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றன. தொடர் விடுமுறை, வார இறுதிகள் நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக, திருவள்ளூர் சிலை மற்றும விவேகானந்தர் மண்டபத்தை சென்று பார்ப்பதற்காக பலரும் வருவார்கள். முன்பாக, திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க, படகு சேவை வழங்கப்பட்டு வந்தது. படகு சேவை நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் தான், தமிழக அரசு சார்பில் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில், பிரம்மாண்டமாக கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read : கனமழை வெளுக்கும்.. 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?

2024 டிசம்பர் மாதம் கண்ணாடி இழை பாலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் மற்றும் 133 அடி உயரம் கொண்ட கண்ணாடி இழை பாலம் ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டது. கடல் காற்று, அதிக ஈரப்பதம் மற்றும் அரிப்பு உள்ளிட்ட கடலோர நிலைமைகளுக்கு ஏற்ப, அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த பாலம் கட்டப்பட்டு, 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இந்த பாலத்தை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்


இந்த நிலையில், 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்டு, 9 மாதங்களே ஆன நிலையில்,  தற்போது கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது  சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிக்ள விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு அருகே நின்று, செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் விரிசல் ஏற்பட்ட பகுதியில் அட்டைகளைப் போட்டு, மூடி வைத்துள்ளனர்.

Also Read : கட்சியை உடைக்க பார்க்கின்றனர்.. செங்கோட்டையனுக்கு இபிஎஸ் பதிலடி!

இதனால், சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.  இது தொடர்பாக வீடியோவையும் சுற்றுலா பயணிகள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், திமுக அரசையும் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்ட குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். கண்ணாடி பாலத்தில் விரிசல் தொடர்பாக சீரமைப்பு மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.