Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம்.. 5 நாட்கள் பார்வையிட தடை.. நோட் பண்ணுங்க!

Kanyakumari Glass Bridge: கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து நாட்கள் தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம்.. 5 நாட்கள்  பார்வையிட தடை.. நோட் பண்ணுங்க!
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Apr 2025 11:18 AM IST

கன்னியாகுமரி, ஏப்ரல் 13:  கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி இழை பாலத்தை  (Kanyakumari Glass Bridge) பார்வையிட ஐந்து நாட்களுக்கு  சுற்றுலா பயணிகள்  தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதுல்  2025 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் கன்னியாகுமரியும் (Kanyakumari Tourism) ஒன்று.  கன்னியாகுமரிக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம்

அங்கிருக்கும் விவேகானந்தர் பாறை, கடலுக்கு நடுவே உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டப பாறை மற்றும் திருவள்ளூர் சிலை இடையே அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி இழை பாலம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

குறிப்பாக, விடுமுறை நாட்களில் குமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது தற்போது கன்னியாகுமரியின் ஐகானிக் இடமாக மாறியுள்ளது.

இந்த பாலத்தை ரசிக்க சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். 2025 ஜனவரி மாதத்தில் மட்டும் 2.15 லட்சம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 17ஆம் தேதி வரை 1.24 பேரும் கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட வந்துள்ளனர்.  இந்த நிலையில், கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட ஐந்து நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

5 நாட்கள் பார்வையிட தடை


கண்ணாடி இழை பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும், கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. அந்த வகையில், தற்போது ஒரு அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  2025 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 19ஆம் தேதி வரை கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கண்ணாடி இழை பாலத்தில் ஆய்வு பணிகள் நடைபெற உள்ளதால், ஐந்து நாட்களுக்கு சுற்றுலா பயணகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துகிறது.