மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்? தஞ்சை மண்டல டிஐஜி பரிந்துரை
Mayiladuthurai DSP Sundaresan : மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றும் சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, ஜூலை 18 : மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றும் சுந்தரேசனை (Mayiladuthurai DSP Sundaresan) சஸ்பெண்ட் செய்ய தஞ்சை டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி சரக டிஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக சுந்தரரேசன் நியமிக்கப்பட்டார். இவர் டிஎஸ்பி சுந்தரேசன் 2025 ஜூலை 17ஆம் தேதியான நேற்று தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு கால்நடையாக நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், இதனால் ஒரு வாரமாக நடந்து சென்றதாக டிஎஸ்பி சந்தரேசன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், தனக்கு பழுதடைந்த வாகனத்தை மாற்று ஏற்பாடாக வழங்கியதாகவும் அவர் குற்றச்சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நேர்மையான காவல் அதிகாரியான எனக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நான் இப்போது தன்னிச்சையாகப் பேட்டி அளித்தால், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்பதை தெரிந்து தான் பேட்டி அளிக்கிறேன்.
Also Read : ‘சுட்டுக் கொல்லனும்’ திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்… தாய் கண்ணீர்மல்க பேட்டி!




இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும என்பதை அறிந்தே இவ்வாறு பேட்டி அளிக்கிறேன்” என கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய தஞ்சை டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி சரக டிஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தரேசன் மீது ஒழுங்கு நடவடிக்கைகள்
இதற்கிடையில், சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 2005-2006ஆம் ஆண்டில் வழக்கு ஆவணங்களை சரியாக பராமரிக்கவில்லை என அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
Also Read : மீண்டும் வரதட்சணை.. பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவன்.. பகீர் பின்னணி!
2010ஆம் ஆண்டு நெல்லையில் தனிநபர் பற்றிய வழக்கு விவரங்களை மறைத்து, அந்த நபருக்கு பாஸ்போர்ட் பெற பரிந்துரைத்ததாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ரூ.40,000 லஞ்சம் பெற்றதாக ஒருவர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.