டி.எஸ்.பி சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.. மறுத்த காவல்துறை.. நடந்தது என்ன?
Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரவு காவல் துணை கண்காணிப்பாளராக இருக்கும் சுந்தரேசன் என்பவர், தனக்கு வாகனம் ஒதுக்கப்படாததால் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தார், ஆனால் இதனை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.

மயிலாடுதுறை, ஜூலை 18, 2025: மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரவு காவல் துணை கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். இவர் மயிலாடுதுறை காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்று மேற்கொண்டார். அதில் அவரது வாகனம் பறிக்கப்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் தன்னை மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் வாகனம் இல்லாததன் காரணமாக வீட்டில் இருந்து நடந்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில மனித உரிமை ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுந்தரேசன் ஓய்வு பெற்ற காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கொலை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுண்டர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். இந்த விசாரணையின் போது காவல்துறை தரப்பில் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வாகனம் இல்லாததால் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலை – சுந்தரேசன்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் கண்காணிப்பாளராக இருக்கும் சுந்தரேசன் அப்பகுதிகளில் அனுமதி இன்றி செயல்பட்ட டாஸ்மார்களுக்கு சீல் வைப்பது, கள்ளச்சாராயம் கடத்தல், மதுபான கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்படி தனது பணியில் தீவிரமாக இருக்கும் காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசனின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் அமைச்சர் மெய்ய நாதனின் பாதுகாப்பு பணிக்கு தனது வாகனத்தை மாற்றி விட்டு பழுதடைந்த வாகனத்தை கொடுத்ததாகவும் அந்த வாகனம் இயக்க கூட தகுதி இல்லாத நிலையில் அந்த வாகனம் தேவையில்லை என திருப்பி ஒப்படைத்து விட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மன ரிதியாக டார்ச்சர் செய்வதாக குற்றச்சாட்டு:
மேலும் காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கில் தனது விசாரணை அறிக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோரின் அழுத்தம் காரணமாக மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக டார்ச்சர் செய்வதாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க: வந்தே பாரத் ரயிலில் புது அறிவிப்பு
அதேபோல் தனக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் வளைந்து கொடுக்காவிட்டால் பிரச்சனை சந்திக்க நேரிடும் என உயர் அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் தனது அலுவலகத்திற்கு நடந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மயிலாடுதுறை காவல்துறை:
இந்நிலையில் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என மயிலாடுதுறை காவல் மறுப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ம்யிலாடுதுறை தற்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் துணைக்காவல் கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல், அவருக்கு TN 51 G 0817 பதிவெண் கொண்ட பொலெரோ வாகனம், அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னையில் இன்று நடக்கும் முகாம்.. விவரம் உள்ளே..
இந்நிலையில் முக்கிய அலுவலுக்காக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அவர் பயன்படுத்தி வந்த அந்த வாகனம் பெறப்பட்டு, மாற்று வாகனமாக TN 51 G 0616 பதிவெண் கொண்ட பொலெரோ வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் இன்று, ஏற்கனவே பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட வாகனம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.