கொதிக்க கொதிக்க கொட்டிய கஞ்சி.. மூன்றரை வயது குழந்தை பரிதாப பலி!
Boiling Porridge Accident Kills Toddler | சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த உணவை மூன்றரை வயது குழந்தை இழுத்துள்ளது. இதில் பாத்திரத்தில் இருந்த சுடு கஞ்சி குழந்தையின் மீது கொட்டிய நிலையில், உடல் வெந்து குழந்தை பலியாகியுள்ளது.

செங்கல்பட்டு, செப்டம்பர் 21 : சென்னையை (Chennai) அடுத்த செங்கல்பட்டு (Chengalpattu) பகுதியில் சுடு கஞ்சி மேலே கொட்டியதால் மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் சாப்பாட்டிற்கு உலை வைத்திருந்த நிலையில், குழந்தை அந்த பாத்திரைத்தை இழுத்த நிலையில் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுடு கஞ்சி கொட்டி குழந்தை பலியானது எப்படி என்பது குறித்தி விரிவாக பார்க்கலாம்.
சுடு கஞ்சி கொட்டி பலியான குழந்தை
சென்னை அடுத்த செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் செய்யூர் அடுத்துள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அதாவது செப்டம்பர் 11, 2025 அன்று குழந்தையின் தாய் அடுப்பில் உணவு சமைத்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், அங்கு சென்ற குழந்தை அடுப்பில் வைக்கப்பட்டு இருந்த உலையை இழுத்துள்ளது. இதன் காரணமாக பாத்திரத்திரத்தில் இருந்த சுடு கஞ்சி குழந்தையின் மீது கொட்டியுள்ளது.
இதையும் படிங்க : முருங்கை இலை சூப் மூலம் கணவர் கொலை… மனைவி, காதலன் கைது!
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தை
சுடு கஞ்சி கொட்டியதால அலறி துடித்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். குழந்தையின் நிலையை கண்ட அவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக அவர்கள் குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதையும் படிங்க : ஒரே நாளில் 16 பேர்.. ஒரு மணி நேரத்தில் 11 பேர்.. கடித்து குதறிய தெரு நாய்
குழந்தையின் இறப்பு செய்தி கேட்டு அவரது பெற்றோர் அலறி துடித்தது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுடு கஞ்சி கொட்டி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.