விருதுநகர்: தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் நடந்த கொடூரம்…
Viruthunagar Orphanage Horror: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் 6 வயது சிறுவன் சாய் சஞ்சீவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் என்பவர் சிறுவனை தூக்கிச் சென்று கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

விருதுநகர் மே 13: விருதுநகர் மாவட்டம் (Viruthunagar) ராஜபாளையம் அருகே உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் (private orphanage) உள்ள 6 வயது சிறுவன் சாய் சஞ்சீவி, தூங்கிக் கொண்டிருந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட நவீன் என்பவரால் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலுள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார். வெண்ணிலா என்ற பெண், தனது கணவர் பிரிந்ததால் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என கூறி, அந்தக் காப்பகத்தில் விட்டு சென்றிருந்தார். காலை சிறுவன் காணாமற்போனதை தொடர்ந்து தேடிய உரிமையாளர்கள், நவீனை சந்தேகத்துடன் கிணற்றருகே கண்டனர். பின்னர் கிணற்றில் சாய் சஞ்சீவியின் சடலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நவீன் கைது செய்யப்பட்டு விசாரணை (Police investigation) நடைபெற்று வருகிறது.
தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் நடந்த கொடூரம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வெண்ணிலா என்ற பெண், தனது கணவர் லோகநாதன் பிரிந்து சென்றதால், தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என கூறி, அவர்களை அந்த காப்பகத்தில் விட்டு சென்றுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் சாய் சஞ்சீவியின் கொடூர மரணம்
அந்தக் குழந்தைகளில் ஒருவனான சாய் சஞ்சீவி (6), ஒன்றாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டாம் வகுப்புக்கு செல்ல தயாராக இருந்தான். இரவு தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுவனை, நவீன் (22) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிச் சென்று, காப்பகத்தின் பின்பக்க கதவின் வழியாக வெளியே கொண்டு வந்து, அருகிலுள்ள விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டான்.
சடலமாக மீட்கப்பட்ட சாய் சஞ்சீவி
அடுத்த நாள் காலை சிறுவன் காணாமல்போனதை கவனித்த காப்பக உரிமையாளர்கள் தேடத் தொடங்கினர். அப்போது நவீன் கிணற்றின் அருகில் நனைந்த உடலுடன் இருந்ததை பார்த்ததும் சந்தேகம் எழுந்தது. உடனே கிணற்றை சென்று பார்த்தபோது, சாய் சஞ்சீவியின் சடலம் கிணற்றில் மிதந்தது.
காவல்துறையினர் நடவடிக்கை
உடனே தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீனை கைது செய்த போலீசார், கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகத்தில் மூழ்கிய பகுதிவாசிகள்
வெண்ணிலா, கணவரால் தன்னால் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை எனக் கூறி விட்டு சென்றது தற்போது உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.