Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காவல் நிலையத்தில் தஞ்சம்.. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் ஷாக்

Thoothukudi Crime News : தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விஷம் குடித்துவிட்டு, தங்களை காப்பாற்ற கோரி, குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் அவர் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் தஞ்சம்.. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் ஷாக்
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 21 Sep 2025 08:39 AM IST

தூத்துக்குடி, செப்டம்பர் 21 : தூத்துக்குடியில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த அவர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்சாமி (28). கார் ஓட்டுநரான இவர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்ளாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளார். அப்பபோது, எதிர்வீட்டில் வசித்து வந்தவர் பார்வதி (33). இவர் கணவர் சுப்பை மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அப்போது, பார்வதி மற்றும் தங்கவேல்சாமி இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளனர். இது இருவருரின் வீட்டிற்கு தெரியவரும், பார்வதியை அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், பார்வதி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். தங்கவேல்சாமியுடன் சேர்ந்து வாழ அவர் திட்டமிட்டிருந்தார். இந் நிலையில், பார்வதியை காணவில்லை என குடும்பத்தினரும் தேடி அலைந்தனர். 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று காலையில் தங்கவேல்சாமி, பார்வதி இருவரும் இருவரும் குலசேகரபட்டினத்திற்கு சென்றனர்.

Also Read : கொதிக்க கொதிக்க கொட்டிய கஞ்சி.. மூன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

திருமணம் மீறிய உறவில் நேர்ந்த சோகம்

வீட்டிற்கு சென்றால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று கூறி, இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனை அடுத்து, தங்கவேல்சாமி, பார்வதி இருவரும் விஷம் குடித்தனர். இதனை அடுத்து, அவர்கள் இருவரும் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் சென்றுனர்.

காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அலறியப்படி நாங்கள் இருவரும் விஷம் குடித்துவிட்டோம் எனவும் தங்களை காப்பாற்றுங்கள் எனவும் கூறியுள்ளனர். பின்னர், வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் போலீசார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Also Read : விஜய் பரப்புரையில் சம்பவம்.. 4 சவரன் திருட்டு.. நாகை பெண் கண்ணீர் மல்க பேட்டி

இதுகுறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து,  இருவீட்டாரிடம் தகவலை தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் தங்கம் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)