Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உஷார்.. ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடரால் அலர்ஜி.. பறிபோன இளைஞர் உயிர்!

Nilgiri Crime News : நீலகிரி மாவட்டத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் கொடுத்த புரோட்டின் பவுடரை இளைஞர் அதிகளவு உட்கொண்டதால், உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த இளைஞர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உஷார்.. ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடரால் அலர்ஜி..  பறிபோன இளைஞர் உயிர்!
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Sep 2025 11:52 AM IST

நீலகிரி, செப்டம்பர் 14 : நீலகிரி மாவட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மகனின் உடலில் அலர்ஜி ஏற்பட்ட நிலையில், மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. ஜிம்மில் வழங்கிய புரோட்டீன் பவுடர் எடுத்தததாக கூறப்படுகிறது. இதனால், அலர்ஜி ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் உடலை கட்டுக் கோப்பாகவும், பிட்டாகவும் வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளையும், ஜிம்மில் கொடுக்கப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் சில உணவுகளை அவர்கள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால், முறையாக மருத்துவரின் ஆலோசனைப்படியே இதையெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படக் கூடும். அப்படி தான், நீலகிரியைச் சேர்ந்த இளைஞர் ஜிம்மில் கொடுத்த புரோட்டீன் பவுடரை சாப்பிட்டதால், உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. உடலில் அலர்ஜி ஏற்பட்டதல் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் குன்னூர் அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவரது இளைய மகன் ராஜேஷ் கண்ணா (18). இவர் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Also Read : சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!

இளைஞர் தற்கொலை

இதனால், இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 60 சதவீத வரை உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 13ஆம் தேதியான நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read : கள்ளக்காதலர்களுக்கு நகையை திருடி கொடுத்த மனைவி.. கணவன் மீது பழி கூறி புகார்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்கள்!

அதாவது, உடற்பயிற்சி கூடத்தில் ராஜேஷ் கண்ணாவுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கப்பட்டது. இதனை ராஜேஷ் கண்ணா உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், அவருக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இந்த அலர்ஜியால் தனது தோற்றம் நன்றாக இல்லை என்று அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் கூறினர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)