விஜய் பரப்புரையில் சம்பவம்.. 4 சவரன் திருட்டு.. நாகை பெண் கண்ணீர் மல்க பேட்டி
TVK Chief Vijay Campaign : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தனது 4 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் சுமதி என்பவர் புகார் அளித்துள்ளார். எப்படியாவது தனது நகையை மீட்டு கொடுங்கள் என கண்ணீர் மல்க அவர் பேட்டி அளித்துள்ளார்.

நாகை, செப்டம்பர் 21 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது தனது 4 சவரன் நகை திருடப்பட்டதாக நாகையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, கண்ணீர் மல்க அவர் பேட்டி அளித்திருந்தார். தனது 4 சவரன் நகை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி, அரியலூரில் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்ட விஜய், 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
நேற்று முதற்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் நால்வரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை செய்தார். அப்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்து விஜயை வரவேற்றனர். இளைஞர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜயின் பரப்புரையில் நேரில் காண கூடியிருந்தனர். இந்த நிலையில் தான், விஜயின் பரப்புரையின்போது தனது 4 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். வட மாநிலத்தவர்கள் தனது 4 சவரன் நகை திருடியாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதனால், விஜய் பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read : ‘உங்க அப்பா பேர்ல பேனா வைக்கணும்னு சொல்றீங்க… உங்க சொந்த மாவட்டம் திருவாரூர் கருவாடா காயுது’ – விஜய் கேள்வி




தவெக பரப்புரையில் பெண்ணிடம் 4 சவரன் திருட்டு
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சுமதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “விஜயை பார்ப்பதற்காக நானும் எனது மகளும் வந்திருந்தோம். நான் 4 சவரன் நகையை அணிந்திருந்தேன். பரப்புரைக்கு வரும்போது, வடமாநிலத்தவர்கள் சிலர் எனது நகையை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனால், எனது நகையை, மகளிடம் கொடுத்து வைத்திருந்தேன். என் மகளும் அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார்.
Also Read ; ‘2026ல் இரண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி… பூச்சாண்டி வேலையை விட்டு…’ – நாகையில் தவெக தலைவர் விஜய் பேச்சு
எனது மகள் பாக்கெட்டில் இருந்து வடமாநிலத்தவர்கள் 4 பேர் எனது நகையை திருடி சென்றனர். ஆனால், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. எனது நகையை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள். தன்னுடைய மகளின் திருமணத்திற்காக கஷடப்பட்டு சேர்த்து வைத்தேன். அதை எப்படியாவது மீட்டு கொடுங்கள்” என அழுது கொண்டே கூறியுள்ளார். மேலும், போலீசாரிடம் புகார் அளித்தபோது, அவர்கள் எந்த நடவடிக்கை இல்லை எனவும் பெண் சுமதி குற்றச்சாட்டி உள்ளார். எனவே, போலீசாரின் விசாரணைக்கு பிறகே, என்ன நடந்தது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.