Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘உங்க அப்பா பேர்ல பேனா வைக்கணும்னு சொல்றீங்க… உங்க சொந்த மாவட்டம் திருவாரூர் கருவாடா காயுது’ – விஜய் கேள்வி

TVK Vijay : வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடி தேரு தான் மனதிற்கு வரும் என்று பேசினார்.

‘உங்க அப்பா பேர்ல பேனா வைக்கணும்னு சொல்றீங்க… உங்க சொந்த மாவட்டம் திருவாரூர் கருவாடா காயுது’ – விஜய் கேள்வி
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Sep 2025 18:54 PM IST

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் தனது பரப்புரையைத் தொடங்கிய விஜய் (Vijay), மத்திய மாநில அரசுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 20, 2025 அன்று விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினம் சென்றடைந்தார். நாகப்பட்டினத்தில் மக்கள் முன்பு பேசும்போது, 2026 ல் 2 பேருக்கு மட்டும் தான் போட்டி. தவெக – திமுக இடையே தான் போட்டி என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தனது பிரச்சார வாகனத்தில் திருவாரூர் வந்டைந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு தங்கத்தில் செய்யப்பட்ட திருவாரூர் தேரை பரிசளிப்பதற்காக வைத்திருந்தனர். அப்போது தனக்கு வைத்திருந்த மாலையை குழந்தைக்கு போட்டுவிட்டார்.

இதையும் படிக்க : களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல கண்ணா.. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய்..

அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் மக்கள் அந்த இடத்தில் சூழந்ததால் விஜய்யின் வாகனத்தால் பரப்புரை செய்யும் இடத்துக்கு வர முடியவில்லை. வாகனத்துக்கு முன்பும் பின்பும் நூற்றுக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்தனர். இதனால் விஜய்யின் வாகனம் மெதுவாகவே சென்றது. விஜய்யின் பேச்சைக் காணம மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

திருவாரூர் கருவாடா காயுது

இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தான் மனதிற்கு வரும். நீண்ட நாள் ஓடமால் இருந்த தேரை ஓட வைத்தது நான் தான் என ஒருவர் பெருமையாக பேசி வந்தார். ஆனால் அவருடைய மகன் மாண்புமிகு ஸ்டாலின், நல்லா ஓட வேண்டிய தமிழ்நாட்டு தேரை நான்கு புறம் கட்டைய போட்டு அப்படியே நிப்பாட்டிட்டாரு. திருவாரூர் மாவட்டம் தான் அவருடைய சொந்த மாவட்டம் என பெருமையா சொல்லிக்கிறாங்க. ஆனால் திருவாரூர் கருவாடா காயுது. உங்க அப்பா பேர்ல பேனா வைக்கனும்னு சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பேர வைக்கிறீங்க. உங்க அப்பா பிறந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே சார்.

இதையும் படிக்க : மிரட்டி பார்க்குறீங்களா? – முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த விஜய்!

‘நெல்லுக்கு ரூ.40 கமிஷன் வாங்குறாங்க’

திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கணும் போல இருக்கு. உங்களுடன் ஸ்டாலின் என்பதை உங்க குடும்பத்துக்கு மட்டும் தான் சொல்லிக்கணும். ஆனால் மக்களிடம் சொல்ல முடியாது. நீங்கள் தான் மக்களுடன் இல்லையே. டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகள் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் இருக்கும் கொள்முதல் மையங்களில் மூட்டை பத்துரூபாய்க்கு வாங்குறாங்க. ஆனா 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்க. ஒரு டன்னுக்கு ரூ.1000 கமிஷன். இதனை என்னிடம் விவசாயிகள் சொன்னார்கள். சிஎம் சார் உங்களுக்கு 40க்கு 40னா எலக்ஷன் ரிசல்டா இருக்கலாம். ஆனால் அது விவசாயிகளுக்கு நீங்கள் வயிற்றில் அடித்து வாஹ்கும் கமிஷன் என்று பேசினார்.