‘2026ல் இரண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி… பூச்சாண்டி வேலையை விட்டு…’ – நாகையில் தவெக தலைவர் விஜய் பேச்சு
TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாகையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2026ல் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் தான் போட்டி. பூச்சாண்டி வேலையை விட்டு கெத்தா தேர்தலை சந்திக்க வாங்க சார் என்று பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay)தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியா செப்டம்பர் 20, 2025 அன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். இந்த நிலையில் நாகப்ட்டினத்தில் விஜய்யை அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் ரசிகர் அவருக்கு அளித்த வேலை, அன்புடன் ஏற்றிக்கொண்டார். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் பேசிய விஜய், உழைக்கும் மக்கள் ஊர் தான் நாகை. எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான நாகை மண்ணில் இருந்து பேசுகிறேன். என்னறைக்கும் உங்கள் நன்பனாக இருக்கும் விஜய்யின் அன்பு வணக்கங்கள் என்று தன் பேச்சை தொடங்கினார்.
மிரட்டி பார்க்கிறீர்களா?
2026 ல் 2 பேருக்கு மட்டும் தான் போட்டி. தவெக – திமுக இடையே தான் போட்டி. பூச்சாண்டி வேலையை விட்டு தில்லாக கெத்தாக தேர்தலை சந்திக்க வாங்க சார். மக்களை பார்க்க தடைபோட்டால் அவர்களிடமே அனுமதி கேட்டு நேரில் வருவேன் என்றார். என் மக்களை சந்திக்க தடை போடுவீர்களா அராஜக அரசியல் வேண்டாம். நான் தனி ஆள் இல்லை. சிஎம் சார், மிரட்டி பார்க்கிறீர்களா? என்னிடம் அது நடக்காது.
இதையும் படிக்க : களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல கண்ணா.. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய்..




நாகூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவரே இல்லை. நாகப்பட்டினம் ரயில் நிலைய பணிகளை விரைவாக மேற்கொள்ளப்படவில்லை. தேவாரண்யத்தில் உப்பு ஏற்றுமதிக்கு வசதி உள்ளதா? நாகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தினால் குறைந்தா போவீர்கள். இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும் அதற்கான காரணத்தை பற்றியும் தீர்வை பற்றியும் மதுரை மாநாட்டிலேயே பேசியிருந்தேன். அது ஒரு தப்பா? மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறதும், அவர்களுக்காக நிக்கிறதும் தப்பா?
இதையும் படிக்க : TVK Vijay: எகிறும் எதிர்பார்ப்பு.. நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரச்சாரம்!
இது தான் நம்முடைய கொள்கை
நான் இதே நாகப்பட்டினத்தில் 14 வருடங்களுக்கு முன்பு 2011 ஆம் ஆண்டு மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். இந்த விஜய் களத்துக்கு வரது ஒன்னும் புதுசு இல்ல கண்ணா! மீனவர்களுக்காக குரல் கொடுக்கிற அதே நேரத்தில் நம்ம தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தலைவனை இழந்து தவிக்கின்ற அவர்களுக்காக குரல் கொடுப்பதும் நம் கடைமை இல்லையா? மீனவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ, அவர்களுடைய வாழ்க்கையும் கனவும் மிக முக்கியம். மீனவர்களின் பிரச்னைக்காக கடிதம் எழுதிவிட்டு கபட நாடகம் நடத்தும் திமுக அரசும் இல்லை. மற்ற மீனவர்கள்னா இந்திய மீனவர்கள், நம்ம மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்களா? இப்படி பிரிச்சு பார்க்க நாம பாசிச பாஜக அரசும் கிடையாது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தான் நம்முடைய முக்கிய கொள்கை என்றார்.