Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாளை நாகை, திருவாரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்..

TVK Vijay Campaign: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 20, 2025 தேதியான நாளை நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக இரண்டு மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாளை நாகை, திருவாரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம்.. ஏற்பாடுகள் தீவிரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Sep 2025 11:11 AM IST

சென்னை, செப்டம்பர் 19, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 2025 தேதியான நாளை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் இறங்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்:

அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 தேதியன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். இதற்கு முன்னதாக தனது பிரச்சாரப் பயணத்தை செப்டம்பர் 13, 2025 அன்று தொடங்கினார். முதல் நாளான அன்று தனது பிரச்சாரத்தை திருச்சி மாவட்டத்தில் தொடங்கினார்.

மேலும் படிக்க: பிரச்சனை எடப்பாடி பழனிசாமி தான்.. அண்ணாமலை நல்ல நண்பர் – டிடிவி தினகரன்..

திருச்சியில் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான கூட்டம் கூடியது. அதேபோல் மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் விஜயின் பிரசார வாகனத்தை சூழ்ந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், நள்ளிரவைத் தாண்டி பிரச்சார வாகனம் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் செல்ல முடியாத காரணத்தால், பெரம்பலூர் மாவட்டத்துக்கான சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. வேறு ஒரு நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை திருவாரூரில் பிரச்சாரம்:

இந்தச் சூழலில், செப்டம்பர் 2025 தேதியான நாளை நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட திட்டத்தின் படி, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தலைவர் விஜய் மூன்று மாவட்டங்களுக்கு சென்று மக்களைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் நலனை கருதி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தத் திட்டத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே சென்று மக்களைச் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  டேட்டிங் செயலி விபரீதம்.. நாகர்கோயில் இளைஞரிடம் மோசடி!

முதலில் வெளியிடப்பட்ட திட்டத்தின் படி, 20 செப்டம்பர் 2025 அன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் தற்போது நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம்:

இதற்காக செப்டம்பர் 18, 2025 தேதியான நேற்று, இதுதொடர்பாக பணிக்குழு அலுவலகத்தில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களின் கூட்டத்தை எவ்வாறு கையாள்வது, திட்டமிடல், நேரத்தில் பரப்புரை மேற்கொள்வது, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, காவல்துறை தரப்பில் கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சாலை ஊர்வலம் மேற்கொள்ளக்கூடாது என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக தொண்டர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்றும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.