Mayiladuthurai: அண்ணிக்களுடன் அத்துமீறிய தொடர்பு.. இளைஞர் கழுத்தறுத்து கொலை
மயிலாடுதுறை அருகே கள்ளத் தொடர்பு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமணன் என்ற இளைஞர், உறவினரின் இரண்டு மனைவியுடனும் தகாத உறவு வைத்திருந்ததால், கணவர் மற்றும் அவரது குடும்பம் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மயிலாடுதுறை, செப்டம்பர் 22: மயிலாடுதுறை அருகே அண்ணிக்களுடன் இருந்த திருமணத்தை மீறிய தொடர்பு காரணமாக இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்கூட்டியே கொள்ளிடம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மேல குத்தவக்கரை என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.
அண்ணிக்களுடன் ஏற்பட்ட தொடர்பு
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் லட்சுமணன் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த தனது பெரியப்பா மகன் ராஜா என்கிற ராமச்சந்திரன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். தனது தந்தையின் வீடு அருகருகே இருந்ததால் அடிக்கடி ராஜா வீட்டுக்கு செல்வதை லட்சுமணன் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இப்படியான நிலையில் ராஜாவுக்கு சசிகலா மற்றும் சத்யா என இரண்டு மனைவிகள் உள்ளனர். அடிக்கடி சென்று வந்த நிலையில் லட்சுமணனுக்கும், ராஜாவின் இரண்டு மனைவிகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய தொடர்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த கூல் லிப் சண்டை.. சைதாப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்!
பணம் கேட்டு கொலை மிரட்டல்
இதற்கிடையில் லட்சுமணனின் தகாத உறவு குறித்து தெரிந்து கொண்ட ராஜா அதனை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் லட்சுமணன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ராஜா, உன்னை கொன்று விடுவேன் என நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து போன லட்சுமணன் கடந்த மூன்று மாதங்களாக சென்னை ஆவடி பகுதியில் தலைமுறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.
அதேசமயம் ராஜா, அவரது தந்தை சம்பந்தம் மற்றும் நண்பர்கள் ஆகியோர் லட்சுமணனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் லட்சுமணனின் மனைவி அஞ்சலியை சந்தித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் கணவர் இருக்கும் இடத்தை கேட்டும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
புகார் தெரிவித்த மறுநாளே கொலை
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அஞ்சலி கொள்ளிடம் காவல் நிலையத்தில் ராஜாவின் மிரட்டல் குறித்து புகார் மனு அளித்துள்ளார். அப்போது இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இந்த நிலையில் அஞ்சலி தனது கணவர் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி செப்டம்பர் 19ஆம் தேதி மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் மூலம் புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை.. அதிர்ச்சி பின்னணி
ஆனால் இந்த மனு அழிக்கப்பட்ட மறுநாளே (செப்டம்பர் 20) கொள்ளிடம் அருகே உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் லட்சுமணன் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ராஜாவின் இரண்டாவது மனைவி சத்யா, லட்சுமணனுக்கு சமீபத்தில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உன்னை கொலை செய்வதற்கு கூலிப்படையை தனது கணவர் ராஜா ஏற்பாடு செய்துள்ளார் என தெரிவித்த ஆடியோவும் இந்த கொலையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராஜா, தந்தை சம்பந்தம், தாய் அமுதா, நண்பர்கள் ராகுல், உறவினர் முத்துலட்சுமி ஆகிய ஐந்து பேரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.