Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சினிமா டிக்கெட் உச்ச வரம்பு ரூ.200 – கர்நாடக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை

Movie Ticket Dispute: கர்நாடக அரசு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் டிக்கெட் விலையை ரூ.200 ஆக நிர்ணயித்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து திரைப்பட தயாரிப்பாளர்களும் மல்டிபிளெக்ஸ் திரையரங்க உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா டிக்கெட் உச்ச வரம்பு ரூ.200 – கர்நாடக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Sep 2025 20:54 PM IST

கர்நாடக அரசு செப்டம்பர், 2025 முதல் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச சினிமா டிக்கெட் விலையை ரூ.200 ஆக நிர்ணயித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு சினிமா ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது. மேலும் டிக்கெட் விலை குறையும் என்பதால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து தயாரிப்பாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.

வழக்கின் பின்னணி

இந்த மாத தொடக்கத்தில் கர்நாடக அரசு கர்நாடக சினிமா கட்டுப்பாட்டு விதிகள், 2014 சட்டத்தில் திருத்தம் செய்து அனைத்து திரையரங்குகளிலும் மல்டிபிளக்ஸ்களிலும் சினிமா சினிமா டிக்கெட் விலையை வரி சேர்க்காமல் ரூ.200 ஆக நிர்ணயித்தது. இது தொடர்பாக அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. ஆனால் 75 இருக்கைகளுக்கு குறைவான பிரீமியம் வசதிகளுடன் கூடிய மல்டி ஸ்கிரீன் திரையரங்குகளுக்கு டிக்கெட் உச்ச வரம்பு பொருந்தாது எனவும் அறிவித்தது.

இதையும் படிக்க : ‘என் மனைவியை கொன்றுவிட்டேன்’ பேஸ்புக் லைவில் அறிவித்த கணவன்.. கேரளாவில் ஷாக்!

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் மல்டிபிளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் இந்த முடிவை ஏற்க முடியாது எனவும் முதலீடு, தொழில்நுட்ப வசதிகள் இடம் போன்றவற்றின் விலை வேறுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இத்தகைய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்தகைய கட்டுப்பாடுகள் சினிமாவுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆனால் ஓடிடி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி போன்ற பிற பொழுதுபோக்கு தளங்களுக்கு இத்கதைய கட்டுப்பாடு இல்லை எனவும் கூறினர்.

இந்த வழக்கு நீதிபதி ரவி வி.ஹோஸ்மணி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விலை கட்டுப்பாடு வணிக சுதந்திரத்தை பாதிக்கும் என தயாரிப்பாளர்களும், மல்டிபிளெக்ஸ் திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் வாதத்தை முன் வைத்தனர். இதனையடுத்து நீதிபதி அந்த உத்தரவை தற்காலிகமாக தடை விதித்து வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க : வரதட்சணை கொடுமையின் உச்சம்..! மருமகள் இருட்டு அறையில் லாக்! பாம்பை விட்டு மாமியார் செய்த கொடூரம்..!

மாநில அரசு தனது வாதத்தில் இந்த உத்தரவு பார்வையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் துறைக்கு நன்மை பயக்கும் விதமாக அரசியலமைப்பின் 38வது பிரிவின் கீழ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என வாதிட்டது. மேலும் கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட இந்த வழக்கில் தலையிட்டு மனுதாரர்களுக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என வாதிட்டது.