Royal Challengers Bengaluru: ஆதாரங்களை சமர்பித்த கர்நாடகா அரசு.. ஆர்சிபி அணியை சாடிய உயர்நீதிமன்றம்!
RCB Celebrations: 2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றதை அடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். கர்நாடக அரசு, ஆர்சிபி அனுமதியின்றி வெற்றி கொண்டாட்டம் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் (IPL 2025) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) வெற்றி பெற்றதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அனுமதியின்றி வெற்றியை கொண்டாடியதாக குற்றம் சாட்டியுள்ளது. இது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிகிறது.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜி. பண்டிட் மற்றும் டி.எம். நடாஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அதாவது 2025 ஜூலை 17ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டம் தொடர்பாக ஏ.சி.பி விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்தது. ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்காக சின்னசாமி ஸ்டேடியத்திலும், அதை சுற்றியும் கிட்டத்தட்ட 2.5 லட்சம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் கூட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, வெற்றி கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளான 2025 ஜூலை 5ம் தேதி ஏ.சி.பி விகாஷ் குமாருக்கு இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




ALSO READ: வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
கர்நாடகா உயர்நீதிமன்றம்,” வெற்றி அணிவகுப்பை நடத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடைசி நிமிடத்தில் வெற்றி கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்தபோது, கர்நாடகா காவல்துறை ஆர்சிபியின் ஊழியர்கள் போல செயல்பட்டனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்” என்று குற்றம் சாட்டியது.
நீதிமன்றம் குற்றச்சாட்டு:
Karnataka Govt has blamed RCB pic.twitter.com/hFOYARkVTF
— RVCJ Media (@RVCJ_FB) July 17, 2025
விராட் கோலியின் வைரல் வீடியோ:
ஜூன் 4 ஆம் தேதி காலை 7:01 மணிக்கு சமூக ஊடகங்களில் ஆர்சிபி அறிவித்தது, விதான் சபாவிலிருந்து சின்னசாமி மைதானத்திற்கு அணிவகுப்பு நடத்தப்படும், இதில் நுழைவு இலவசம். ஆர்சிபியின் இந்தப் பதிவு மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில், அரசாங்கம் அறிக்கையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வீடியோவைக் குறிப்பிட்டு, விராட் காலை 8:55 மணிக்கு நேரலைக்கு வந்தபோது ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியது. சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும், ஆனால் அன்று மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு வந்தனர்.
ALSO READ: 43 ஆண்டுகால வறட்சி! சாதிப்பார்களா பும்ரா, சிராஜ்..? ஓல்ட் டிராஃபோர்ட்டில் காத்திருக்கும் சாதனை!
மைதானத்தின் வாயில்களும் சரியான நேரத்தில் திறக்கப்படாததால், கூட்டம் சில கதவுகளை உடைத்தது. மோசமான திட்டமிடல், ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் ஆர்சிபி மற்றும் இணை ஏற்பாட்டாளர்களின் செயல்முறைக்கு இணங்காததால் இந்த விபத்து நடந்ததாக கர்நாடக அரசு அறிக்கையின் கூறியது. இந்தநிலையில், ஏசிபி விகாஷ் குமார் இடைநீக்கம் சரிதான் என்று கூறிய நீதிபதி பி.கே. ஸ்ரீவஸ்தவா மற்றும் நிர்வாக உறுப்பினர் சந்தோஷ் மெஹ்ரா ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தின் பெங்களூரு அமர்வு, இந்த வழக்கை வருகின்ற 2025 ஜூலை 24 அன்று தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.