AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் தேரே இஸ்க் மெய்ன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Tere Ishk Mein Movie Review Here: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

ஓடிடியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் தேரே இஸ்க் மெய்ன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
தேரே இஸ்க் மெய்ன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Mar 2026 21:35 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்தியா மற்றும் இன்றி ஹாலிவுட் வரை சென்று பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாது. அதில் ஒன்று தான் இந்தி சினிமாவில் வெளியான தேரே இன்ஸ்க் மெய்ன் படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் எழுதி இயக்கி இருந்தார். இவர் தான் நடிகர் தனுஷை இந்தி சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் இந்தி சினிமாவில் நடிகர் தனுஷ் அடுத்தடுத்தப் படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி தனுஷ் இந்தி சினிமாவில் இறுதியாக நடிகர் தனுஷ் நடித்தப் படம் தான் தேரே இஸ்க் மெய்ன்.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகை கிருத்தி சனோன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் தேரே இஸ்க் மெய்ன் எப்படி இருக்கு?

டெல்லியில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் தனுஷ் ரௌடிதனம் செய்துக்கொண்டு அனைவரிடமும் மிகுந்த கோபத்தை காட்டும் ஒரு முரட்டு நபராக வாழ்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சைக்காலஜியில் தனது ரிசர்ஜ் வொர்க்கிற்கு ப்ராஜெக்டாக தனுஷை தேர்வு செய்கிறார் நாயகி கிருத்தி சனோன்.

Also Read… Suraj Venjaramoodu: ரஜினிகாந்த் சார் எனது கதாபாத்திரத்தை பாராட்டினார் – சுராஜ் வெஞ்சாரமூடு!

அப்படி இருக்கும் போது தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதா இல்லையா? அல்லது வெறும் தனது புராஜெக்ட்டிற்காக மட்டும் கிருத்தி சனோன் தனுஷை பயன்படுத்திக்கொண்டு விட்டுவிட்டாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் அனைத்துவிதமான எமோஷனையும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் கையாண்டுள்ள்ளார் என்றே கூறவேண்டும்.

மேலும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இருந்தது. அவரது இசையில் வெளியான பாடல்களும் பிஜிஎம் ஆகியவை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Anushka Shetty: திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டிய அனுஷ்கா ஷெட்டி.. யாரை திருமணம் செய்கிறார் தெரியுமா?

Follow Us