Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
Kara Movie First Single Release Date: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் கூட்டணியில் தயாராகியுள்ள படம்தான் கர. இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் லிஸ்டில் ஒருவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 53 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் தனுஷின் 54வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் “கர” (Kara). இதை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே போர் தொழில் (Por Thozhil) என்ற திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இவர் தனது இரண்டாவது படத்தையே தனுஷை வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Dhanush) நடித்துள்ளார். இந்த ஜோடியானது இப்படத்தின் மூலமாகத்தான் முதல் முதலாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார்( GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர படத்தின் முதல் பாடல் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பான் தற்போது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: கென் படம் எடுக்கப்போறேன்-னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. நா அவரை சுத்தமா நம்பள – தனுஷ் ஓபன் டாக்!
தனுஷின் கர திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:
The world of #Kara begins with its first note 🙂#KaraFirstSingle is releasing tomorrow 5 PM 🔥#கர #కర #करा#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh… pic.twitter.com/YKwwRpFg97— Vels Film International (@VelsFilmIntl) March 13, 2026
தனுஷின் கர படத்தின் நடிகர்கள் மற்றும் கதை :
தனுஷின் இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளது. இதில் தனுஷ் சாதாரணமான வேடமாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளாராம். கொடூரமான வேலையை செய்த நபர் ஒருவர், சாதாரணமாக தனது வாழ்க்கையை வாழ தொடங்கிய பிறகு முன் நடந்த சம்பவத்தால் மீண்டும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என்பதே இதன் மைய கதை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜய் – அஜித் சாரிடம் நான் எப்போதும் அதை கேப்பேன் – யோகி பாபு பேச்சு!
இப்படத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூவுடன், ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. தற்போது இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதையடுத்து ட்ரெய்லர் 2வது பாடல் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.