தனுஷுடன் புது படத்தில் ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை? – அட இவர்தான்!
D56 Heroine Update : தனுஷ் நடிப்பில் தொடர்ந்து புது புது படங்கள் தயாராகிவரும் நிலையில், தனது 56வது படத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற படமானது வெளியானது . கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படமானது முழுக்க இந்தி மொழியில் வெளியாகியிருந்த நிலையில், வசூல் ரீதியாக சிறப்பாக அமைந்திருந்தது. இப்படத்தை என்ற நடித்துவந்தார். இதை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியிருந்த நிலையில், ஷூட்டிங் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவருகிறது. இது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், படத்தில் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இப்படத்தை முடித்த கையேடு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasami) இயக்கத்தில் டி55 (D55) என்ற படத்தில் தனுஷ் இணைந்துவிட்டார். இதில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற இரு நடிகைகளும் இணைந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் டி56 (D56) என்ற படத்தில் இணைகிறார். தற்போது இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதில் தனுஷிற்கு எந்த நடிகை ஜோடியாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை ருக்மிணி வசந்த் தான் (Rukmini Vasanth).




இதையும் படிங்க: ஆர்த்தி இல்லாமல் என்னால் எதுவுமே பண்ணிருக்க முடியாது – மனைவியை புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்!
தனுஷின் டி56 திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட்:
ஆரம்பத்தில் டி56 படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில், அந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் படம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தனுஷின் டி 56 படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துதான் இயக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷ் முற்றிலும் கிராமத்து இளைஞனாக நடிக்க அவருக்கு ஜோடியாக எந்த நடிகையை நடிக்கவைக்கலாம் என திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சூர்யா 47 படத்தில் கேமியோ தோற்றத்தில் பிரபல தமிழ் நடிகர்… வைரலாகும் தகவல்
அந்த வகையில் தற்போது நடிகை ருக்மிணி வசந்தத்தை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக வட்டாரங்கள் கூறுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதன் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் டி56 படம் குறித்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்ட எக்ஸ் பதிவு:
கெளம்பியாச்சு 🙏#Recce #D56 pic.twitter.com/zaDW7gFruk
— Tamizharasan Pachamuthu (@tamizh018) March 4, 2026
தனுஷின் டி56 படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கம் நிலையில், எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது, யார் இசையமைக்கிறார் என இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால் இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது. இப்படம் மதுரையை மையமாக கொண்ட ஒரு வித்தியாசமான கதையாக உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.