AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற காதலும் கடந்து போகும் படம்

10 Years Of Kadhalum Kadandhu Pogum Movie : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காதலும் கடந்து போகும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற காதலும் கடந்து போகும் படம்
காதலும் கடந்து போகும் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Mar 2026 20:50 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் காதலும் கடந்து போகும். இந்தப் படத்தினை இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டின் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பி.சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், டி.ஆர்.கே.கிரண், ரிந்து ரவி, மணிகண்டன், சமீர் பாரத் ராம், கைலாஷ், சூப்பர் குட் சுப்ரமணி, அனுஷ்கா, ரமேஷ் திலக் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் கே. இ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளை நிறைவு செய்தது காதலும் கடந்து போகும் படம்:

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி காமெடி ரௌடி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவரது பக்கத்து வீட்டில் குடிவரும் பெண்ணாக நடிகை மடோனா செபாஸ்டின் நடித்து இருப்பார். தொடர்ந்து வேலை தேடிக்கொண்டு இருக்கும் மடோனா பக்கத்து வீட்டில் இருக்கும் விஜய் சேதுபதியுடன் நட்பு ஏற்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து எப்படி பயணிக்கிறார்கள் அந்த முடிவு எப்படி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே… போஸ்டர் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டிய Hi படக்குழு

இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்க்கின்ற்னர் தற்போது.

Also Read… ரவி மோகன் நடிக்கும் படத்திற்கு இனி ‘ப்ரோ கோட்’ என்று பெயரிடப்படாது!

Follow Us