Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இளைஞரை குழந்தை திருமணம் செய்த இளம் பெண் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

Bengaluru Young Woman Charged | பெங்களூருவில் 19 வயது இளைஞரை காதல் திருமணம் செய்துக்கொண்ட பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆண்களுக்கான திருமண வயது 21 ஆக உள்ள நிலையில், இளம் பெண் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞரை குழந்தை திருமணம் செய்த இளம் பெண் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Sep 2025 08:25 AM IST

பெங்களூரு, செப்டம்பர் 22 : பெங்களூரில் (Bengaluru) 19 வயது நபரை திருமணம் செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கும், அவர் திருமணம் செய்துக்கொண்ட நபருக்கும் ஒரே வயதாகும் நிலையில், அந்த இளைஞருக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்ததற்காக இளம் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளைஞரை  திருமணம் செய்த பெண் மீது போலீஸ் வழக்குப்பதிவு

கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் சவுமியா என்ற 19 வயது இளம் பெண். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஜூலை, 2025-ல் காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் குதூரில் கணவன் – மனைவியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தான் அந்த இளம் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க : எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!

இளைஞரை குழந்தை திருமணம் செய்ததாக புகார் – இளம் பெண் மீது வழக்குப்பதிவு

அதாவது அந்த இளைஞருக்கு 19 வயது ஆகும் நிலையில், அவரை அந்த இளம் பெண் குழந்தை திருமணம் செய்ததாக காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது. காரணம் ஆண்களுக்கு திருமண வயது 21 ஆக உள்ள நிலையில் 19 வயதிலேயே அந்த பெண் அவரை திருமணம் செய்துக்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், இளம் பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ‘எனக்கு 6 பானிபூரி வேணும்’ நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.. திணறிய போலீஸ்!

இந்தியாவை பொருத்தவரை பெண்களுக்கான திருமண வயது 19 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது. இந்த விவகாரத்தில் அந்த இளைஞர் தனது திருமண வயதை எட்டாததே முக்கிய குற்றமாக கருதப்பட்டுள்ளது. வழக்கமாக பெண்களுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது இளைஞரை குழந்தை திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.