மதுபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்.. அடுத்து நேர்ந்த விபரீதம்!
Andhra Crime News : ஆந்திர மாநிலத்தை மதுபோதையில் இருந்த நபர், பாம்பின் தலையை கடித்துள்ளார். பின்னர், இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதன் மீது அவர் தூங்கி இருக்கிறார். இதனால், அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா, செப்டம்பர் 19 : ஆந்திர மாநிலத்தில் மதுபோதையில் ஒருவர் பாம்பின் தலையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு தன்னை கடித்ததால், அதனை பழிவாங்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப நாட்களில் பாம்பு கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், சிலர் பாம்பை அசால்ட்டாக கையில் பிடித்தபடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இதில் உள்ள ஆபத்தை உணராமல் சிலர் இவ்வாறு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, மதுபோதையில் பாம்பின் தலையை ஒருவர் கடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் அடிக்கடி மது குடித்து வருகிறார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 18ஆம் தேதியான இரவு வெங்கடேஷ் மதுபோதையில் இருந்துள்ளார். மதுபோதையில் இருந்த வெங்கடேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு விஷப் பாம்பு அவரை கடித்து இருக்கிறது. இதனை அடுத்து, மதுபோதையில் இருந்த வெங்கேடஷ், பாம்பை தனது கைகளால் பிடித்து அதன் தலையை கடித்ததாக கூறப்படுகிறது.
Also Read : காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. அதிர்ந்த நெல்லை.. நடந்தது என்ன?




மதுபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்
பின்னர் இறந்த பாம்பை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனை தனது பக்கத்தில் வைத்து தூங்கி இருக்கிறார். தன்னை கடித்த பாம்பை பழிவாங்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்திருக்கிறார். இதனை அடுத்து, வீட்டில் இறந்த பாம்பை பக்கத்தில் வைத்து தூங்கி உள்ளார். இரவில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஸ்ரீகாளஹஸ்தி பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Also Read : நெல்லையில் பரபரப்பு.. இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்ஐ.. திக்திக் வீடியோ!
பணியில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். ஆனால் உடல்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உயர் சிகிச்சைக்காக திருப்பதி ருயா மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷின் பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், “யாராவது பாம்பின் தலையைக் கடித்து அதன் மீது தூங்குவார்கள் என்று கற்பனை செய்வது கடினம். அவரது செயல்களைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.