‘எனக்கு 6 பானிபூரி வேணும்’ நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.. திணறிய போலீஸ்!
Gujarat Woman Panipuri Protest : குஜராத் மாநிலத்தில் தனக்கு 6 தர வேண்டிய 6 பானிபூரிக்கு பதிலாக 4 பூரிகள் மட்டுமே கொடுத்ததால் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

குஜராத், செப்டம்பர் 19 : தனக்கு தர வேண்டிய பானிபூரி தர வேண்டும் என்று கூறி குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுமக்களும், அரசியல் கட்சியனரும் தங்கள் அடிப்படை தேவைகளையும், உரிமைகளை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, சாலையில் அமர்ந்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காக பலரும் இங்கு போராடி வரும் சூழலில், குஜராத்தில் பெண் ஒருவர் பானிபூரிக்காக தர்ணாவில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாசர் பகுதியில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். போராட்டத்திற்கான காரணத்தை கேட்டு அதிகாரிகளும் ஷாக் அடைந்தனர். அந்த பெண் கடைக்கு சென்று ரூ.20க்கு பானிபூரி வாங்கி இருக்கிறார். 20 ரூபாய்க்கு 6 பானிபூரி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், கடைக்காரர் அந்த பெண்ணுக்கு 20 ரூபாய்க்கு 4 பானிபூரிகள் மட்டுமே வழங்கி இருக்கிறார்.




Also Read : மதுபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்.. அடுத்து நேர்ந்த விபரீதம்!
நடுரோட்டில் தர்ணாயில் ஈடுபட்ட பெண்
दीदी नाराज हो गई नाराज भी ऐसी हुई धरने पर बैठ गई कारण जानकर आप चौक जायेगे
गुजरात के वडोदरा में गोलगप्पे कम खिलाने पर सड़क में धरने पर बैठी महिला
गोलगप्पे वाले 20 रुपये में 6 पानीपुरी की जगह खिलाए चार गोलगप्पे, गुजरात के वडोदरा में सड़क पर बैठी महिला, DIAL 112 टीम ने स्थिति को… pic.twitter.com/1MuwR6ZQiB
— ममता राजगढ़ (@rajgarh_mamta1) September 19, 2025
இதனால், தனக்கு 6 பானிபூரிகள் வேண்டுமென்று கடைக்காரரிடம் கேட்டு இருக்கிறார். இதனால், கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கோபமடைந்த அந்த பெண், சாலைக்கு நடுவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும், அங்கிருந்த போலீசாரிடம் தனக்கு வழங்க வேண்டிய 6 பானிபூரிகளையும் வழங்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
Also Read : நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றி Swiggy, Zomato ஊழியர்கள்.. ஹைதராபாத் இளைஞர் நெகிழ்ச்சி பதிவு!
மேலும், தனக்கு இரண்டு பானிபூரிகளை குறைவாக வழங்கிய கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசாரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இந்த காரணத்தை கேட்டு திகைத்து போலீசார், என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஒருவழியாக அந்த பெண் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.